பா ரஞ்சித்தின் அடுத்த படம்.. அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி அறிவிப்பு..!
Send us your feedback to audioarticles@vaarta.com
இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் உருவான "தங்கலான்" திரைப்படம் கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியான நிலையில், தற்போது அவர் அடுத்த படத்திற்காக தயாராகி வருகிறார் என்பதும் "வேட்டுவம்" என்பதுதான் அவரது அடுத்த படத்தின் டைட்டில் என்பது சமீபத்தில் அவர் ஒரு பேட்டியில் தெரிவித்தார் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.
இந்நிலையில், ஒரு பக்கம் தனது அடுத்த படத்தின் பணிகளை தொடர்ந்து கொண்டிருக்கும் பா ரஞ்சித், சில படங்களை தயாரித்து வருகிறார் என்பதும், அவற்றில் ஒரு படத்தின் ரிலீஸ் செய்தியை அவர் தனது சமூக வலைத்தளத்தில் சற்றுமுன் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.
குரு சோமசுந்தரம், சஞ்சனா நடராஜன், மாறன், ஆண்டனி பாரி இளவழகன் ஆகியோர் நடிப்பில் உருவாகி வரும் "பாட்டல் ராதா" என்ற படத்தை பா. ரஞ்சித் தயாரித்து வருகிறார். இந்த படத்தை தினகரன் சிவலிங்கம் என்பவர் இயக்கி வருகிறார். சாம் சிஎஸ் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்ற நிலையில், தற்போது இந்த படம் டிசம்பர் 20ஆம் தேதி கிறிஸ்துமஸ் விருந்தாக வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இது குறித்த புதிய போஸ்டர், அஜித் வெளியிட்டுள்ளார். அந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. "பாட்டல் ராதா" படத்தின் டீசர் கடந்த ஜூலை மாதம் வெளியானது. ஒரு குடிகாரன் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்கள் தான் இந்த படத்தின் கதை என்பது அந்த டீசரிலிருந்து தெரிய வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Mark the date! An emotional and chaotic storm is on its way 🤩#BottleRadha will be yours worldwide from December 20 #BottleRadhaFromDec20
— pa.ranjith (@beemji) October 30, 2024
A film by @Dhinakaranyoji
A @RSeanRoldan Musical
Produced by @beemji @officialneelam @balloonpicturez #ArunBalaji@gurusoms @sanchana_n… pic.twitter.com/31mXxzFncw
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments