பா ரஞ்சித்தின் கிரிக்கெட் படம்.. டைட்டில்-ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் ரிலீஸ்..!

  • IndiaGlitz, [Saturday,May 20 2023]

இயக்குனர் பா ரஞ்சித் தயாரிப்பில் உருவாகும் கிரிக்கெட் கதை அம்சம் உள்ள படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சற்று முன் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

இயக்குனர் பா ரஞ்சித் தற்போது விக்ரம் நடித்து வரும் ’தங்கலான்’ என்ற படத்தை இயக்கி வரும் நிலையில் அவர் ஒரு சில படங்களை தயாரித்து வருகிறார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் பா ரஞ்சித் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படங்களில் ஒன்று ’புளுஸ்டார்’ என டைட்டில் வைக்கப்பட்டு அதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் வீடியோ வெளியாகி உள்ளது.

இந்த படத்தில் அசோக் செல்வன் மற்றும் சாந்தனு பாக்யராஜ் ஆகிய இருவரும் முக்கிய கேரக்டரில் நடித்து வருகின்றனர். இருவரும் ஆவேசமாக இரு அணி கிரிக்கெட் வீரர்களாக நடித்துள்ளனர் என்பதும் அவ்வப்போது மோதிக் கொள்கின்றனர் என்பதும் இன்று வெளியாகியுள்ள வீடியோவில் இருந்து தெரிய வருகிறது.

மேலும் இந்த படத்தில் பிரித்வி, கீர்த்தி பாண்டியன் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். 96 பட இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார். இந்த படத்தை கதை திரைக்கதை எழுதி ஜெயகுமார் இயக்கியுள்ளார். தமிழழகன் ஒளிப்பதிவில் செல்வா படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது. நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் உருவாகி உள்ள இந்த படம் விரைவில் ரிலீஸ் ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.