பிக்பாஸ் வீட்டில் புரமோஷன் செய்யப்பட்ட பா.ரஞ்சித் திரைப்படம்!

பிக்பாஸ் வீட்டில் நேற்று மகத் மற்றும் யாஷிகா ஆனந்த் ஆகிய இருவரும் சிறப்பு விருந்தினர்களாக வருகை தந்தனர். இதில் நேற்று மகத், யாஷிகா நடித்த 'இவன் தான் உத்தமன்' என்ற படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டது

இதனையடுத்து இன்று பிக்பாஸ் வீட்டில் பிக்பாஸ் சீசன் 2, டைட்டில் வின்னர் ரித்விகா மற்றும் ஜனனி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக வருகை தந்துள்ளனர். இந்த நிலையில் இன்று தினேஷ், ரித்விகா நடிப்பில் பா.ரஞ்சித் தயாரித்த 'இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு' படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. மேலும் பிக்பாஸ் வீட்டில் 'இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு' படத்தின் போஸ்டரும் வைக்கப்பட்டுள்ளது. இந்த டிரைலரை பிக்பாஸ் போட்டியாளர்கள் பார்த்து ரசித்தனர்.

இயக்குனர் பா.இரஞ்சித்திடம் உதவியாளராக பணிபுரிந்த அதியன் ஆதிரை இயக்கும் இந்த படத்தில் தினேஷ், கயல் ஆனந்தி, ரித்விகா உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு தென்மா இசையமைத்துள்ளார். கிஷோர் குமார் ஒளிப்பதிவில் உருவாகியிருக்கும் இந்த படம் விரைவில் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது