அசோக்செல்வன் - கீர்த்தி பாண்டியன் திருமணம்: மறக்க முடியாத பரிசளித்த பா ரஞ்சித்..!

  • IndiaGlitz, [Wednesday,September 13 2023]

நடிகர் அசோக் செல்வன் மற்றும் நடிகை கீர்த்தி பாண்டியன் திருமணம் இன்று காலை நடந்த நிலையில் சற்று முன் இருவரும் இணைந்து நடித்த படத்தின் பாடல் வெளியாகி இணையதளத்தில் வைரல் ஆகி வருகிறது.

அசோக் செல்வன், சாந்தனு பாக்யராஜ், கீர்த்தி பாண்டியன், பகவதி பெருமாள் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவான திரைப்படம் ’புளூ ஸ்டார்’. பா. ரஞ்சித் தயாரிப்பில் ஜெயக்குமார் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது

இந்த நிலையில் கோவிந்த் வசந்தா இசையில் உருவான இந்த படத்தின் சிங்கிள் பாடல் சற்றுமுன் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 'ரயிலின் ஒலிகள்’ தொடங்கும் இந்த பாடலை உமாதேவி எழுதி இருக்க பிரதீப் குமார், சக்தி ஸ்ரீ கோபாலன் ஆகிய இருவரும் பாடியுள்ளனர்.

அசோக் செல்வன், கீர்த்தி பாண்டியன் தோன்றும் இந்த பாடலின் வீடியோவை இன்று பா ரஞ்சித் வெளியிட்டுள்ளது, அவர்களது மறக்க முடியாத திருமண பரிசாக கருதப்படுகிறது. மேலும் பா ரஞ்சித் இந்த பாடலை வெளியிட்டதோடு, தனது மனமார்ந்த திருமண வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.