நாங்குநேரி பள்ளி சம்பவம்: இயக்குனர்கள் பா ரஞ்சித், மாரி செல்வராஜ், மோகன் ஜி கண்டனம்..!

  • IndiaGlitz, [Saturday,August 12 2023]

நாங்குநேரியில் ஒரு மாணவனை சக மாணவர்கள் வீடு புகுந்து வெட்டிய சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தாக்கப்பட்ட மாணவன் மருத்துவமனையில் அனுமதி கேட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் அந்த மாணவனை தாக்கிய ஆறு பேர் கைது செய்யப்பட்டு சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து தமிழ் திரை உலகத்தை சேர்ந்த மூன்று இயக்குனர்கள் தங்களது கருத்தை தெரிவித்துள்ளனர். அவை பின்வருமாறு:

பா ரஞ்சித்: சாதி என்பது அழகிய சொல்! குடி பெருமை கொள்ளுவோம்! சாதிவாரி வேட்பாளர்களை களம் இறக்கி தேர்தல் வெற்றி பெருவது! சாதி எதிர்ப்பையும் சாதி ஆதரவையும் ஒன்றாக பார்ப்பது! நாங்கள் ஆண்ட பரம்பரை என பெருமை பேசுவது! சாதி பெருமை உடை! சாதி அடையாள கயிறு! சாதி மறுப்பு காதலுக்கு எதிரான வெறுப்பு பிரச்சாரம்! என தமிழ்நாட்டில் இருக்கும் தீவிர சாதி பற்றின் காரணமாக, பட்டியலின மக்கள் மீது வெறுப்பை வளர்த்தெடுத்ததின் விளைவாகவே “நாங்கு நேரியில் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் சக மாணவன் மீது சாதி வன்மம் கொண்டு இத்தகைய கொடூர தாக்குதலை நிகழ்த்தி இருக்கிறார்கள். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் நமக்கு தெரிந்தவரை ஐந்துக்கும் மேற்பட்ட பட்டியலின மக்களுக்கு எதிரான வன்கொடுமைகள் தமிழ்நாட்டில் நிகழ்த்தப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் சாதி உணர்வு என்பது எப்படி பட்டியலின மக்களுக்கு எதிரான வெறுப்பாக வளர்த்தெடுக்கபட்டு இருக்கிறது என்கிற உண்மை நிலவரத்தை இப்போதாவது சரியாக புரிந்துகொண்டு, இத்தகைய சாதி வன்கொடுமைகளுக்கு எதிராக திமுக அரசும், தமிழ்நாட்டின் அனைத்து அரசியல் கட்சிகளும், இயக்கங்களும், மக்களும் இணைந்து , அடுத்த தலைமுறையையும் விழுங்கி கொண்டிருக்கும் சாதியை ஒழிக்க ஒன்றிணைவோம்!

மாரி செல்வராஜ்: கடந்த இரண்டு நாட்களாக இந்த படிகட்டுகளில் சொட்டிக்கொண்டிருக்கும் சூடான இரத்தத்தின் கதையை யாரிடமாவது சீக்கிரம் கேட்டு தெரிந்துகொள்ளுங்கள் . காய்ந்து போனால் அதை பழைய புண்ணாக்கி எளிதாக எல்லாரையும் கடந்து போகசொல்லி உங்கள் இதயம் உங்களுக்கே தெரியாமல் எல்லாரிடமும் மன்றாட ஆரம்பித்துவிடும் .

மோகன் ஜி: மாணவர்கள் மத்தியில் அனைத்து தீய பழக்கங்களும் பரவி வருகிறது.. சம்மந்தப்பட்டவர்களை கைது செய்து உயர்பட்ச தண்டனை உடனடியாக வழங்கப்பட வேண்டும்.. பாதிக்கப்பட்ட சின்னதுரை மற்றும் அவரது தங்கை விரைவாக குணமடைய வேண்டி கொள்கிறேன்.. இவர்கள் குடும்பத்தினருக்கு அரசு பெரிய அளவில் உதவ வேண்டும்..

More News

போதைப்பொருள் விழிப்புணர்வு குறித்து தமிழ் நடிகரின் பேச்சு.. தேம்பி தேம்பி அழுத பெண் காவலர்

 போதைப்பொருள் விழிப்புணர்வு குறித்து தமிழ் நடிகர் ஒருவர் பேசியதை கேட்டு பாதுகாப்புக்கு வந்திருந்த பெண் காவலர் தேம்பி தேம்பி அழுத சம்பவம்  சென்னையில் நடந்துள்ளது.

இந்த உலகத்துல ரெண்டு விதமான மனிதர்கள்.. ஒண்ணு வேட்டையாடுறது இன்னொன்னு இரையாகிறது.. சசிகுமாரின் 'நா நா' டிரைலர்'..!

சசிகுமார் மற்றும் சரத்குமார் முக்கிய வேடங்களில் நடித்த 'நா நா' என்ற படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது இந்த படத்தின் டிரைலர் வெளியாகி இணையத்தில் வைரலாகி

நேற்று ஒரே நாளில் மறைந்த 2 நடிகர்களின் அம்மாக்கள்.. திரையுலக பிரபலங்கள் இரங்கல்..!

நேற்று ஒரே நாளில் இரண்டு நடிகர்களின் அம்மாக்கள் காலமானதையடுத்து திரை உலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

'ஜெயிலர்' படம் பார்த்த முதலமைச்சர் ஸ்டாலின்.. நெல்சன் பகிர்ந்த புகைப்படம்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'ஜெயிலர்' திரைப்படம் நேற்று முன்தினம் வெளியாகி பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது என்பதும் இந்த படம் முதல் நாளே 80 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்தது

ரஜினியின் 'ஜெயிலர்' சூப்பர் வெற்றி.. தொலைபேசியில் நெல்சனை அழைத்த விஜய்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'ஜெயிலர்' திரைப்படம் நேற்று வெளியாகி பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருவது மட்டுமின்றி வசூலிலும் சாதனை செய்து வருகிறது. இந்த படம் உலகம் முழுவதும் ஒரே