close
Choose your channels

பா ரஞ்சித்தின் 'சார்பாட்டா பரம்பரை' ரிலீஸ் குறித்த தகவல்: ரசிகர்கள் அதிருப்தி!

Wednesday, June 30, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஆர்யா நடிப்பில் இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சார்பாட்டா பரம்பரை’ திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி ஒரு சில மாதங்கள் ஆன நிலையில் விரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்தப் படத்தை திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய வேண்டும் என்பதற்காக படக்குழுவினர் காத்திருந்ததாகவும் ஆனால் தற்போது திரையரங்குகள் எப்போது திறக்கும் என்பது குறித்த தகவல் இல்லை என்பதால் ஓடிடியில் ரிலீஸ் செய்ய முடிவு செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்தன.

இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி ‘சார்பாட்டா பரம்பரை’ திரைப்படம் அமேசான் ஓடிடியில் நேரடியாக ரிலீஸ் செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

குத்து சண்டை வீரராக இந்த படத்தில் நடிக்கும் நடிகர் ஆர்யா மிகவும் ரிஸ்க் எடுத்து இந்த படத்திற்காக தனது உடலை உடற்பயிற்சி செய்து நிஜ குத்து சண்டை வீரர் போல் மாறியிருந்தார் என்பதால் இந்த படத்தை திரையரங்குகளில் காண ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருந்தனர். ஆனால் தற்போது நேரடியாக ஓடிடியில் ரிலீஸ் என்பதால் ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆர்யா, துஷாரா, கலையரசன், சந்தோஷ் பிரதாப், ஜான் விஜய் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். முரளி ஒளிப்பதிவில், செல்வா படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை ரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment