ஊர் பூரா டாஸ்மாக்கை திறந்துட்டு அப்புறம் குடிக்கிறவனை குறை சொல்றீங்க: பா ரஞ்சித்தின் 'பாட்டில் ராதா' டீசர்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல இயக்குனர் பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி உள்ள ’தங்கலான்’ திரைப்படம் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் அவரது தயாரிப்பில் சில படங்கள் உருவாகி வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பா. ரஞ்சித்தின் நீலம் புரடொக்சன்ஸ் தயாரிப்பில் ’பாட்டில் ராதா’ என்ற படம் குறித்த அறிவிப்பு வெளியான நிலையில் சற்றுமுன் அந்த படத்தின் டீசர் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
’நானா குடிகாரன்’ என்ற பாடலுடன் ஆரம்பிக்கும் டீசரில் பல்வேறு சுவாரஸ்யமான காட்சிகள் இடம் பெற்றுள்ளன. குடிகாரனாக குரு சோமசுந்தரம் நடித்த நிலையில் அவரது மனைவி ’இன்னொரு தடவை குடித்தால் தாலியை கழட்டி தூக்கி எறிந்து விட்டு குழந்தைகளுடன் நான் போய்க்கிட்டே இருப்பேன்’ என்ற காட்சியும், இதனை அடுத்து ’குடியை விட்டு விடப் போகிறாயா’ என்று கேட்கும் நபரிடம் ’எதுவாக இருந்தாலும் ஒரு கட்டிங் போட்டுவிட்டு அதன் பிறகு தான் தெளிவாக யோசிக்கணும்’ என்று பதில் கூறும் காட்சியும் இடம் பெற்றுள்ளன.
‘எதுக்குடா குடிக்கிற’ என்று காவல்துறை அதிகாரி கேட்கும் போது ’நிறைய குடிக்கிறேன் சார் நான் குடிப்பதனால் எங்கள் குடும்பம் நாசமா போகுது, அதை எண்ணி கவலைப்பட்டு தான் குடிக்கிறேன்’ என்று கூறும் காட்சியும் டீசர் வீடியோவில் உள்ளது.
மேலும் ’நான் சம்பாதித்து என் காசில் குடிக்கிறேன், யாரும் குடிக்க கூடாது என்று சொல்ல ரைட்ஸ் கிடையாது, ஊர் பூரா டாஸ்மாக்கை திறந்து வைத்துவிட்டு அப்புறம் குடிக்கிறவனை குறை சொல்றீங்க’ என்று அரசையும் மறைமுகமாக விமர்சனம் செய்யும் காட்சிகளும் இந்த படத்தில் உள்ளன.
மொத்தத்தில் ஒரு குடிகாரனின் வாழ்க்கை எந்த அளவுக்கு மோசமாக இருக்கும் என்பதை இந்த படம் வெளிச்சம் போட்டு காட்டும் வகையில் உள்ளது என்பது இந்த டீசர் வீடியோவில் இருந்து தெரிய வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com