டிரைலர் வெளியான சில நாட்களில் அடுத்த அப்டேட்.. 'தங்கலான்' குறித்து பா ரஞ்சித்தின் பதிவு..!
Send us your feedback to audioarticles@vaarta.com
இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில், விக்ரம் நடிப்பில் உருவான ‘தங்கலான்’ திரைப்படம் ரிலீஸ்க்கு தயாராகியுள்ள நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வந்து மிரட்டியது என்பதை ஏற்கனவே பார்த்தோம். மேலும் இந்த படம் ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் விரைவில் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட உள்ளது.
இந்த நிலையில் சற்றுமுன் இயக்குனர் பா. ரஞ்சிட்ஜ் தனது சமூக வலைதள பக்கத்தில் ‘தங்கலான்’ திரைப்படத்தின் ’மினிக்கி மினுக்கி’ என்ற பாடல் வரும் புதன்கிழமை வெளியாகும் என்று அறிவித்துள்ளார். 32 வினாடி வீடியோவையும் அவர் வெளியிட்டு உள்ள நிலையில் இந்த பாடல் சூப்பர் ஹிட் ஆகும் என்பது ப்ரோமோ வீடியோவில் இருந்தே தெரிய வருகிறது. இந்த வீடியோவில் உள்ள பாடல் வரிகள் இதோ
அன்னக்கிளி அன்னக்கிளி
சாஞ்சாடுகிற சாயக்கிளி
அன்னநடை மின்னலிட
முன்ன வந்தாளே
புது வெட்கம் வந்து மாமன் இப்ப
நிக்கிறானே சொக்கி
மினுக்கு மினுக்கு மேனா மினுக்கி
விக்ரம், மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி உள்பட பலர் நடிப்பில் உருவாகிய ‘தங்கலான்’ திரைப்படத்தை பா ரஞ்சித் இயக்கியுள்ளார். ஜிவி பிரகாஷ் இசையில், கிஷோர் குமார் ஒளிப்பதிவில், செல்வா படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படம் இந்த ஆண்டின் பெரும் எதிர்பார்ப்புக்குரிய படங்களில் ஒன்றாகும்.
A taste of the musical world of #Thangalaan ❤#MinikkiMinikki Full Song releasing this Wednesday 🎹
— pa.ranjith (@beemji) July 15, 2024
A @gvprakash Musical@Thangalaan @chiyaan @GnanavelrajaKe @StudioGreen2 @OfficialNeelam @parvatweets @MalavikaM_ @NehaGnanavel @dhananjayang @NetflixIndia @jungleemusicSTH pic.twitter.com/xSZDBZ5dCd
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com