'காலா' தலைப்பு ஏன்? இயக்குனர் ரஞ்சித் விளக்கம்

  • IndiaGlitz, [Thursday,May 25 2017]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ரஞ்சித் இயக்கவுள்ள படத்தின் டைட்டில் 'காலா' என்பதை சற்று முன்னர் பார்த்தோம். இந்த நிலையில் இந்த படத்தின் டைட்டில் குறித்து இயக்குனர் பா.ரஞ்சித் செய்தியாளர்களுக்கு விளக்கம் அளித்துள்ளார்.

'காலா' என்றால் காலன், எமன் என்று பொருள். கரிகாலன் என்பதன் சுருக்கமே 'காலா' என்று வைக்கப்பட்டுள்ளது. நெல்லை வட்டாரங்களில் எமனை 'காலா' சாமியாக வழிபடுவார்கள். மும்பையில் வசிக்கும் நெல்லை வட்டார மக்களின் வாழ்க்கையை சொல்வது தான் "காலா' படத்தின் கதை. இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் 28ம் தேதி தொடங்கப்பட உள்ளது. மும்பை மற்றும் சென்னையில் இந்த படத்தின் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளோம். இப்படத்தில் நடிக்கும் நடிகர்கள் குறித்த தகவல் விரைவில் வெளியிடப்படும்.

ரஜினிக்கு மிகவும் பிடித்த பெயர் கரிகாலன். இந்த தலைப்பை நான் அவரிடம் தெரிவித்ததும் அவருக்கு மிகவும் பிடித்து விட்டது. இந்த படம் வெளியிடும் தேதி பற்றி இன்னும் முடிவு செய்யப்படவில்லை. 'காலா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மாலை வெளியாகும். இவ்வாறு இயக்குனர் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

More News

குஷ்பு-தமிழிசை நடத்திய பரபரப்பான டுவிட்டர் போர்

பிரபல நடிகையும் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளருமான குஷ்புவும் தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜனும் டுவிட்டரில் ஆவேசமாக கருத்துக்களை பகிர்ந்து கொண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது...

சக்தி வாசுவின் '7 நாட்கள்' திரை முன்னோட்டம்

பிரபல இயக்குனர் பி.வாசுவின் மகன் சக்தி, ராகவா லாரன்சுடன் நடித்த 'சிவலிங்கா நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அவர் நடித்த அடுத்த படமான '7 நாட்கள்' திரைப்படம் தற்போது ரிலீசுக்கு தயாராகி உள்ளது. இந்த படம் வரும் ஜூன் 2ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் முன்னோட்டம் குறித்து தற்போது பார்ப்போம்...

பழம்பெரும் திரைப்பட பாடலாசிரியர் நா.காமராசன் காலமானார்

எம்.ஜி.ஆர், சிவாஜி, கமல்ஹாசன், ரஜினிகாந்த் நடித்த படங்கள் உள்பட பல திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுதிய பழம்பெரும் பாடலாசிரியர் நா.காமராசர் காலமானார்...

'தலைவர் 161' படத்தின் மாஸ் டைட்டில் இதுதான்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ரஞ்சித் இயக்கவுள்ள 'தலைவர் 161' திரைப்படத்தின் டைட்டில் இன்று அறிவிக்கப்படவுள்ளதாக நேற்று இந்த படத்தின் தயாரிப்பாளர் தனுஷ் தனது சமூக வலைத்தளத்தில் அறிவித்திருந்தார் என்பதை பார்த்தோம்

ரஜினி எது செய்தாலும் சரியாகத்தான் இருக்கும்: தனுஷ்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த வாரம் ரசிகர்களை சந்தித்தபோது தெரிவித்த ஒருசில அரசியல் கருத்துக்கள் தமிழக அரசியலில் பெரும் சுனாமியை கிளப்பிவிட்டது. அந்த சுனாமி இன்று வரை சுழன்றடித்து வருகிறது. தேசிய தலைவர்கள் முதல் உள்ளூர் தலைவர்கள் வரை ரஜினியின் அரசியல் முடிவை விமர்சிக்காதவர்களே இல்லை என்று கூறும் வகையில் உள்ளது...