'கபாலி' இயக்குனரின் அடுத்த பட ஹீரோ இவர்தான்.

  • IndiaGlitz, [Monday,June 27 2016]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' திரைப்படம் ஜூலை 15ஆம் தேதி ரிலீஸ் ஆவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. ரஜினிகாந்த் அமெரிக்காவில் இருந்து திரும்பி வந்ததும் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவுள்ளது.
இந்நிலையில் நேற்று இந்த படத்தின் தெலுங்கு ஆடியோ ரிலீஸ் விழா நடைபெற்றது. இந்த விழாவில் ரஞ்சித், தன்ஷிகா உள்பட 'கபாலி' படக்குழுவினர்களும் பிரபல தெலுங்கு நட்சத்திரங்களும் கலந்து கொண்டனர். இந்த விழாவில் இயக்குனர் பா.ரஞ்சித் தனது அடுத்த படம் சூர்யா நடிக்கும் படம் என்பதை உறுதி செய்தார்.
சூர்யா தற்போது ஹரி இயக்கத்தில் S3 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளது. இந்த படத்தை அடுத்து சூர்யா, ரஞ்சித் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இந்த படம் குறித்த அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வெளிவரவுள்ளது.