இதுதான் உண்மையான அர்த்தம், திசை திருப்ப வேண்டாம்: பா ரஞ்சித்
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’கபாலி’ மற்றும் ’காலா’ உள்பட ஒருசில படங்களை இயக்கியவர் இயக்குனர் பா ரஞ்சித். இவர் அவ்வப்போது தனது சமூக வலைத்தளத்தில் புரட்சிகரமான கருத்துக்களை தெரிவித்து வருகிறார் என்பது தெரிந்ததே.
இந்த நிலையில் திராவிட கட்சிகள் நடத்தி வரும் தலித் அரசியல் குறித்து பா ரஞ்சித் தனது டுவிட்டரில் ஒரு டுவிட்டை பதிவு செய்திருந்தார். அந்த டுவிட் இதுதான்: அதிகாரத்தின் விளையாட்டை தேவையின் பொருட்டு ஆளுக்கொரு முறையாக விளையாடிக்கொண்டிருக்கிறார்கள்.
ஆட்டக்காரர்களுக்கு தெரிந்தே இருக்கிறது பலி கொடுக்கப்படவேண்டிய ஆடுகளின் குரல்களை. விடுதலையின் சுவை அறியா ஆடுகளுக்கு பசி தீர்க்கும் புற்களே அமிர்தம் !! ஆகா என்ன சுவை.
இந்த டுவிட்டில் ஆடு, புற்கள் குறித்து நெட்டிசன்கள் சர்ச்சைக்குரிய பொருளை புரிந்து கொண்டு கமெண்ட்டுக்களில் பதிவு செய்தனர். இதனையடுத்து தனது டுவிட்டுக்கு பா.ரஞ்சித் அவர்களே விளக்கம் அளித்துள்ளார். இக்கருத்தை அண்ணன் திருமாவுக்கு எதிராக திசை திருப்பும் வேலையை விட்டு விட்டு, எல்லா அரசியல் கட்சிகளும் தலித் மக்களை எப்படி அதிகாரத்திற்க்காக கையாளுகிறார்கள் என்கிற உண்மையை உணருங்கள். ஆடுகள்: தலித் மக்கள் புற்கள்: கட்சிகளின் முழக்கங்கள் மீதான நம்பிக்கைகள்’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இயக்குனர் பா.ரஞ்சித்தின் இந்த இரண்டு டுவிட்டுகளும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிகாரத்தின் விளையாட்டை தேவையின் பொருட்டு ஆளுக்கொரு முறையாக விளையாடிக்கொண்டிருக்கிறார்கள். ஆட்டக்காரர்களுக்கு தெரிந்தே இருக்கிறது பலி கொடுக்கப்படவேண்டிய ஆடுகளின் குரல்களை. விடுதலையின் சுவை அறியா ஆடுகளுக்கு பசி தீர்க்கும் புற்களே அமிர்தம் !! ஆகா என்ன சுவை??
— pa.ranjith (@beemji) May 23, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout