நண்பரின் உடலை பார்த்து கதறி அழுத பா. ரஞ்சித்.. அதிர்ச்சி வீடியோ..!
Send us your feedback to audioarticles@vaarta.com
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் நேற்று இரவு மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் அவருடைய நெருங்கிய நண்பர் இயக்குனர் பா ரஞ்சித் கதறி அழுத வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் நேற்று இரவு படுகொலை செய்யப்பட்டார். உணவு டெலிவரி செய்யும் நபர்கள் போல் வந்த மர்ம நபர்கள் அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டியதாகவும் இதனை அடுத்து ரத்த வெள்ளத்தில் மிதந்த அவர் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்ற போது சில நிமிடங்களில் அவரது உயிர் பிரிந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளன.
ஆம்ஸ்ட்ராங் மறைவு அரசியல் தலைவர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக ஆம்ஸ்ட்ராங் மற்றும் பா ரஞ்சித் ஆகிய இருவரும் மிக நெருங்கிய நண்பர்கள் என்று கூறப்படும் நிலையில் ஆம்ஸ்ட்ராங் மறைவை கேட்டது அதிர்ச்சி அடைந்தவர் அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்று அவருடைய உடலை பார்த்து கதறி அழுததாக தெரிகிறது. மேலும் பா. ரஞ்சித் கதறி அழுத வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளதை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
அய்யோ விட்டுட்டோமே…. பகுஜன் சமாஜ் மாநிலத் தலைவர் கொலை.. தேம்பி தேம்பி அழுத இயக்குனர் பா. ரஞ்சித்.. ஆவேசத்தில் போலீசாருடன் வாக்குவாதம் செய்த தொண்டர்கள்..!#Chennai | #Perambur | #BahujanSamajParty | #ArmStrong | #Death | #Chennai | #Killed | #PaRanjith | #PolimerNews pic.twitter.com/XdClRT6qro
— Polimer News (@polimernews) July 5, 2024
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com