உரிமை கேட்டு போராடுபவர்களை கைது செய்வதா? இயக்குனர் பா ரஞ்சித் கண்டனம்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
தங்கள் உரிமையை கேட்டு போராடும் தொழிலாளர்களை போராட விடு என இயக்குனர் பா. ரஞ்சித் சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் என்ற பகுதியில் இயங்கி வரும் சாம்சங் நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள், கடந்த சில வாரங்களாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர, தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில், அமைச்சர்கள் டிஆர்பி ராஜா, தாமோ அன்பரசன், மற்றும் சி.வி. கணேசன் குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையில், தொழிற்சங்கம் அமைப்பது தவிர, மற்ற அனைத்து கோரிக்கைகளும் ஏற்றுக் கொள்ளப்பட்டதை அடுத்து, தொழிற்சங்கத்தை அங்கீகரிக்கும் வரை போராட்டம் தொடரும் என சாம்சங் தொழிலாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் சாம்சங் ஊழியர்களின் போராட்டத்திற்கு திமுகவின் கூட்டணி கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், இயக்குனர் பா. ரஞ்சித் தனது எக்ஸ் பக்கத்தில் இது குறித்து கூறியுள்ளதாவது:
தொழிற்சங்கம் என்பது ஒரு தொழிலாளியின் அடிப்படை உரிமையாகும். இப்படி தொழிற்சங்கம் வேண்டியும், சிறந்த பணிச்சூழலுக்காகவும் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக வேலை நிறுத்தம் செய்து வரும் சாம்சங் தொழிலாளர்கள் தங்களது சட்டப்பூர்வ உரிமைகளுக்கு உட்பட்டு வேலை நிறுத்தம் செய்து வருகின்றனர்.
தமிழக அரசு இதை மதிக்காமல், தனியார் நிறுவனத்திற்கு சாதகமாக நடந்து கொள்வது மிக மோசமான அனுகுமுறை. தொழிலாளர்கள் அமைதியான முறையில் வேலை நிறுத்தம் செய்து வரும் போராட்டக்களத்தை அரசு அகற்றுவதில் எந்த நியாயமும் இல்லை.
தொழிலாளர்களை இவ்வாறு கைது செய்வது அரசியலமைப்பிற்கு முரணானது, மேலும் தொழிலாளர்களை அச்சுறுத்துவதற்கு காவல்துறையை ஒரு கருவியாகப் பயன்படுத்துவது கண்டிக்கப்பட வேண்டியதாகும். தமிழக அரசே! தங்கள் உரிமை கேட்டுப் போராடும் தொழிலாளர்களை போராட விடு!!!
தொழிற்சங்கம் என்பது ஒரு தொழிலாளியின் அடிப்படை உரிமையாகும். இப்படி தொழிற்சங்கம் வேண்டியும், சிறந்த பணிச்சூழலுக்காகவும் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக வேலைநிறுத்தம் செய்து வரும் சாம்சங் தொழிலாளர்கள் தங்களது சட்டப்பூர்வ உரிமைகளுக்கு உட்பட்டு வேலைநிறுத்தம் செய்து வருகின்றனர். தமிழக…
— pa.ranjith (@beemji) October 9, 2024
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout