close
Choose your channels

பாக்சிங் என்ன உன் அப்பன் வீட்டு சொத்தா? 'சார்பாட்டா' டிரைலர்!

Tuesday, July 13, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஆர்யா நடிப்பில் பா ரஞ்சித் இயக்கத்தில் உருவான ‘சார்பாட்டா பரம்பரை என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடைந்து சமீபத்தில் அமேசான் ஓடிடியில் ரிலீஸாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதனை அடுத்து சற்று முன்னர் இந்த படத்தின் டிரைலர் ரிலீஸ் ஆகியுள்ளது.

சுமார் 3 நிமிடங்களுக்கும் மேல் ஓடும் இந்த ட்ரைலரை பார்க்கும் போதே படத்தின் கதை ஓரளவு புரிய வருகிறது. வெள்ளைக்காரனிடம் இருந்து கற்றுக்கொண்ட பாக்ஸிங் சண்டையால் இரு பிரிவினருக்கு இடையே நடக்கும் மோதல் தான் படத்தின் கதை என்பது தெரிய வருகிறது.

இந்த படம் பீரியட் படம் என்பதால் அந்த காலத்தில் உள்ளது போன்ற அபாரமாக செட் அமைக்கப்பட்டு மிகச் சிறந்த முறையில் படமாக்கப்பட்டுள்ளது என்பது தெரிய வருகிறது. குறிப்பாக பாக்சிங் சண்டைக் காட்சிகள் தத்ரூபமாக உள்ளது ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக இருக்கும்.

ஆர்யா, கலையரசன், பசுபதி மூவரும் தங்களது இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். நாயகி துஷாரா தனது பங்கிற்கு படத்திற்கு வலு சேர்த்துள்ளார். சந்தோஷ் பிரதாப், ஜான் விஜய் உள்பட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

சந்தோஷ் நாராயணனின் பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரிய பலம் என்பது குறிப்பிடத்தக்கது. பா ரஞ்சித் இயக்கத்தில், முரளி ஒளிப்பதிவில், செல்வா படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை நீலம் புரடொக்சன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது என்பதும் இந்த படம் வரும் 22ம் தேதி அமேசான் ஓடிடியில் வெளியாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment