பாக்சிங் என்ன உன் அப்பன் வீட்டு சொத்தா? 'சார்பாட்டா' டிரைலர்!

  • IndiaGlitz, [Tuesday,July 13 2021]

ஆர்யா நடிப்பில் பா ரஞ்சித் இயக்கத்தில் உருவான ‘சார்பாட்டா பரம்பரை என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடைந்து சமீபத்தில் அமேசான் ஓடிடியில் ரிலீஸாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதனை அடுத்து சற்று முன்னர் இந்த படத்தின் டிரைலர் ரிலீஸ் ஆகியுள்ளது.

சுமார் 3 நிமிடங்களுக்கும் மேல் ஓடும் இந்த ட்ரைலரை பார்க்கும் போதே படத்தின் கதை ஓரளவு புரிய வருகிறது. வெள்ளைக்காரனிடம் இருந்து கற்றுக்கொண்ட பாக்ஸிங் சண்டையால் இரு பிரிவினருக்கு இடையே நடக்கும் மோதல் தான் படத்தின் கதை என்பது தெரிய வருகிறது.

இந்த படம் பீரியட் படம் என்பதால் அந்த காலத்தில் உள்ளது போன்ற அபாரமாக செட் அமைக்கப்பட்டு மிகச் சிறந்த முறையில் படமாக்கப்பட்டுள்ளது என்பது தெரிய வருகிறது. குறிப்பாக பாக்சிங் சண்டைக் காட்சிகள் தத்ரூபமாக உள்ளது ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக இருக்கும்.

ஆர்யா, கலையரசன், பசுபதி மூவரும் தங்களது இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். நாயகி துஷாரா தனது பங்கிற்கு படத்திற்கு வலு சேர்த்துள்ளார். சந்தோஷ் பிரதாப், ஜான் விஜய் உள்பட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

சந்தோஷ் நாராயணனின் பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரிய பலம் என்பது குறிப்பிடத்தக்கது. பா ரஞ்சித் இயக்கத்தில், முரளி ஒளிப்பதிவில், செல்வா படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை நீலம் புரடொக்சன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது என்பதும் இந்த படம் வரும் 22ம் தேதி அமேசான் ஓடிடியில் வெளியாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

More News

ஆண் உறுப்பை பெரிதாக்க வேண்டுமா? Expert கூறும் பெஸ்ட் அட்வைஸ்!

உலகத்தில் உள்ள பெரும்பாலான ஆண்களுக்கு ஆணுறுப்பின் அளவு பற்றிய கவலை இருக்கத்தான் செய்கிறது.

அரசியலுக்கு வரும் இன்னொரு பிரபல நடிகர்: கம்யூனிஸ்ட் கட்சியில் சேர விருப்பமாம்!

திரை உலகில் உள்ள பிரபலங்கள் அரசியலுக்கு வருவது கடந்த பல ஆண்டுகளாக இந்தியாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்பதும் குறிப்பாக தமிழகத்தில் அண்ணாதுரை, கருணாநிதி, எம்ஜிஆர் மற்றும்

நான் வெற்றி பெற்றவுடன் 'வலிமை' அப்டேட் வந்து விட்டது: வானதி டுவிட்டுக்கு வந்த கமெண்ட்ஸை பாருங்கள்!

தல அஜித் நடிப்பில் உருவாகி வரும் 'வலிமை' படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது என்பதும் இந்த அப்டேட் மிகப்பெரிய அளவில் வைரல் ஆனது

லிங்குசாமி - ராம்பொத்தினேனி படப்பிடிப்பு: கிளாப் அடித்து தொடங்கி வைத்த பிரபல தயாரிப்பாளர்!

ஆனந்தம், ரன், அஞ்சான் உள்பட பல வெற்றிப் படங்களை இயக்கிய இயக்குனர் லிங்குசாமி அடுத்ததாக பிரபல தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனி நடிக்கும் புதிய படத்தை இயக்க இருக்கிறார் என்ற தகவலை

வடமாநிலங்களில் மின்னல் தாக்கி ஒரே நாளில் 70க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த அவலம்!

உத்திரப்பிரதேசம், ராஜஸ்தான், மத்தியப்பிரதேச மாநிலங்களில் மின்னல் தாக்கி ஒரே நாளில் 77 பேர் உயிரிழந்துள்ளனர்.