பா ரஞ்சித்தின் அடுத்த படத்தில் துருவ் விக்ரம்: அதிகாரபூர்வ அறிவிப்பு
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’கபாலி’ மற்றும் ’காலா’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் பா. ரஞ்சித் தற்போது ஆர்யா நடித்து வரும் ’சல்பேட்டா’ என்ற திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் விரைவில் இந்த படம் திரைக்கு வர உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் இயக்குனர் பா ரஞ்சித் தனது நீலம் புரொடக்சன் நிறுவனத்தின் மூலம் ஒரு சில படங்களை தயாரித்து வருகிறார். அதில் ஒன்று தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது நீலம் புரொடக்சன் சார்பில் தயாரிக்க இருக்கும் அடுத்த திரைப்படத்தை மாரி செல்வராஜ் இயக்க இருப்பதாகவும் இந்த படத்தில் துருவ் விக்ரம் நடிக்க இருப்பதாகவும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது
ஏற்கனவே ’பரியேறும் பெருமாள்’ மற்றும் ’கர்ணன்’ ஆகிய படங்களை இயக்கி முடித்துள்ள மாரி செல்வராஜுக்கு இது மூன்றாவது படம் என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல் ’வர்மா’ என்ற படத்தில் நடித்துள்ள துருவ்விக்ரம் விரைவில் தனது தந்தை விக்ரமுடன் இணைந்து கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் நடிக்க உள்ளார். இந்த நிலையில் அவர் அடுத்ததாக மாரிசெல்வராஜ் படத்திலும் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
Exciting announcement! @beemji @GRfilmssg @LRCF6204 associate with @mari_selvaraj for the next project on the slate!
— Neelam Productions (@officialneelam) January 28, 2021
Starring ?? #DhruvVikram@sooriaruna@pro_guna pic.twitter.com/MwbW9FN6ZQ
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments