பி வாசு குடும்பத்தில் நிகழ்ந்த சோக சம்பவம்.. 'சந்திரமுகி 2' படப்பிடிப்பு ஒத்திவைக்கப்படுகிறதா?

  • IndiaGlitz, [Saturday,February 25 2023]

பிரபல இயக்குனர் பி வாசு இல்லத்தில் நடந்த சோக நிகழ்வு காரணமாக இன்னும் சில நாட்களுக்கு ’சந்திரமுகி 2’ படத்தின் படப்பிடிப்பு நடக்காது என்று கூறப்படுகிறது.

தமிழ் திரையுலகின் இயக்குனர்களில் ஒருவரான பி வாசு, ரஜினிகாந்த் நடித்த ’மன்னன்’ ’உழைப்பாளி’, ‘சந்திரமுகி’ உள்ளிட்ட பல திரைப்படங்களை இயக்கி உள்ளார். இந்த நிலையில் பி வாசுவின் தந்தை பீதாம்பரம் அவர்களின் உடன் பிறந்த சகோதரர் எம்சி சேகர் காலமாகிவிட்டார். வயது முதிர்வு காரணமாக அவர் காலமானதாக கூறப்படுகிறது. அவருக்கு வயது 91.

பி வாசு இயக்கிய ’பணக்காரன்’ ’உழைப்பாளி’ ’சேதுபதி ஐபிஎஸ்’ ’வால்டர் வெற்றிவேல்’ ’ரிக்சா மாமா’ ’லவ் பேர்ட்ஸ்’ உள்பட பல படங்களுக்கு இவர் கேமராமேனாக பணி புரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 1986 ஆம் ஆண்டு முதல் பல திரைப்படங்களுக்கு இவர் கேமராமேன் ஆக பணிபுரிந்து உள்ளார் என்பதும், சகோதரர் பீதாம்பரத்துடன் இணைந்து ஒரு சில படங்களை தயாரித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பி வாசுவின் சித்தப்பா எம்சி சேகர் காலமானதை அடுத்து ’சந்திரமுகி 2’ படத்தின் படப்பிடிப்பு சில நாட்கள் நடைபெறாது என்று கூறப்படுகிறது.

More News

ஓடி ஓடி கோப்பைகளை குவிக்கும் ரஜினி பேரன்கள்.. மகிழ்ச்சியாக புகைப்படங்களை பகிர்ந்த ஐஸ்வர்யா..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பேரன்களும், ஐஸ்வர்யாவின் மகன்களுமான லிங்கா மற்றும் யாத்ரா ஆகிய இருவரும் பள்ளி அளவில் நடந்த ஓட்ட போட்டியில் ஓடி கோப்பைகளை குவித்துள்ள புகைப்படங்களை

பிறந்த நாளில் கெளதம் மேனனின் மாஸ் போஸ்டர்.. 'பத்து தல' படக்குழு ரிலீஸ்..!

தமிழ் திரை உலகின் பிரபல இயக்குனர் கௌதம் மேனன் இன்று தனது ஐம்பதாவது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

தனுஷின் 'வாத்தி' திரைப்படத்தின் வசூல் இத்தனை கோடியா? அதிகாரபூர்வ அறிவிப்பால் பரபரப்பு..!

தனுஷ் நடித்த 'வாத்தி' திரைப்படம் பிப்ரவரி 17ஆம் தேதி உலகம் முழுவதும் தமிழ் தெலுங்கு மொழிகளில் திரையரங்குகளில் ரிலீசான நிலையில் இந்த படம் ஒரே வாரத்தில் வசூலித்த தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.

'துருவ நட்சத்திரம்' படத்தின் சூப்பர் அப்டேட் கொடுத்த ஹாரிஸ் ஜெயராஜ்; ரசிகர்கள் குஷி..!

கௌதம் மேனன் இயக்கத்தில், சிம்பு நடிப்பில் உருவான 'வெந்து தணிந்தது காடு' என்ற திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் அடுத்ததாக கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள

23 பந்துகளில் 59 ரன்கள்.. பிரபல நடிகரின் அணியில் இருந்த கிறிஸ் கெய்ல் விளாசல்..!

கன்னட திரை நட்சத்திரங்களுக்கான கிரிக்கெட் போட்டி தற்போது நடைபெற்று வரும் நிலையில் அதில் பிரபல நடிகர் கிச்சா சுதீப் அணியில் இருந்த கிறிஸ் கெய்ல் 23 பந்துகளில் 59 ரன்கள் அடித்து தனது அணிக்கு வெற்றியை