தற்காப்புக்காக பி.வாசு எழுதிய கடிதம்
Send us your feedback to audioarticles@vaarta.com
கோலிவுட்டின் பிரபல இயக்குனர் பி.வாசு கடந்த பல வருடங்களாக வெற்றி இயக்குனராக வலம் வந்து கொண்டிருப்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் கடந்த புத்தாண்டு தினத்தில் அவருடைய மகன் சக்தி நடித்த 'தற்காப்பு' என்ற திரைப்படம் வெளிவந்துள்ளது. இதுகுறித்து பி.வாசு பத்திரிகையாளர்களுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
அன்புள்ள பத்திரிகை நண்பர்களுக்கு,
திரைப்படத்துறையில் நடிகை, நடிகர்கள் கலைஞர்கள் புகழின் உயரத்திற்குப் போக முக்கிய காரணம் நீங்கள்தான்.
நான் இன்று இந்த அளவுக்கு உயர, இடைவிடாமல் இன்றும் தொடர்ந்து பலமொழி படங்களை இயக்க முக்கிய காரணம் நீங்கள்தான் என்பதை மறப்பதில்லை.
உங்கள் கரங்களால் என் தோளையும், கன்னத்தையும் தட்டி சரியான விமர்சனங்கள் மூலமாக என்னை உயர்த்திருக்கிறீர்கள்.
என்னை உயர்த்தியதைப் போல உங்கள் அன்புக்கரங்கள், என் மகன் சக்திவேல் வாசுவும் வளர உதவ வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
அவன் நடித்து, இயக்குனர் R.P. ரவி அவர்களின் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் 'தற்காப்பு" திரைப்படத்தை, உங்கள் விமர்சன வாழ்த்துக்கள் மூலம் வெற்றி பெற செய்ய வேண்டுமென்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
இதுவரை விமர்சனம் எழுதியவர்களுக்க் நன்றி
இவ்வாறு பி.வாசு தன்னுடைய கடிதத்தில் எழுதியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments