ஏ.ஆர்.ரஹ்மானிடம் பி சுசீலா கேட்ட உதவி!

ஆஸ்கார் நாயகன் ஏஆர் ரஹ்மான் அவர்களிடம் பிரபல பின்னணி பாடகி பி சுசிலா கேட்ட உதவி குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

ஆஸ்கார் நாயகன் ஏஆர் ரஹ்மான் கதை எழுதி தயாரித்து இசையமைத்த திரைப்படம் ’99 சாங்ஸ்’. இந்த படம் தற்போது ஓடிடியில் வெளியாகி உள்ளது. இது குறித்த புரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் ஏஆர் ரஹ்மான் பேசியபோது ’மிகச்சிறந்த தென்னிந்திய பாடகி பி சுசிலா அவர்களிடம் பேசிக்கொண்டிருந்தேன். அப்போது ’99 சாங்ஸ்’ படம் பார்த்து விட்டீர்களா? என்று கேட்டபோது ’அப்படி என்றால் என்ன? என்று அவர் என்னிடம் திரும்பி கேட்டார். அதன் பிறகு இது நான் தயாரித்த திரைப்படம் என்றும் ஓடிடியில் பாருங்கள் என்றும் கூறினேன். பின்னர் அவர் படத்தை பார்த்துவிட்டு என்னை மீண்டும் அழைத்து, ‘படம் மிகவும் நன்றாக இருக்கிறது என்றும் என்னுடைய வாழ்க்கை வரலாறு கதையும் இதே போன்று உருவாக்கப்பட வேண்டும் என்று எனக்கு ஆசை என்றும் அதற்கு நீங்கள்தான் நீங்கள்தான் உதவ வேண்டும் என்றும் கேட்டார்.

ஏழு தலைமுறைகளாக ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடிய ஆளுமையுள்ள பாடகி பி சுசிலா அவர்கள் என்னுடைய படத்தை பாராட்டி இருப்பது பெருமையான விஷயம் என்று ஏஆர் ரஹ்மான் கூறினார். இந்த நிலையில் ஏஆர் ரஹ்மான், பி சுசிலாவின் வாழ்க்கை வரலாறு படத்தின் கதையையும் எழுதி தயாரிப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

கார்த்தியின் 'கைதி 2' உருவாகுமா? தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு தகவல்!

கார்த்தி நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக்கிய 'கைதி' திரைப்படம் கடந்த 2019ஆம் ஆண்டு தீபாவளி தினத்தில் வெளியானது.

இறந்து விடுவேன் என பயமாக உள்ளது...! வீடியோ வெளியிட்டு கதறும் பெண்...!

ராமநாதபுரம்  மாவட்டத்தில் கொரோனா பாதிக்கப்பட்ட பெண், இறந்து விடுவேன் என பயமாக உள்ளது என்று வெளியிட்ட வீடியோ காண்போர் மனதை பதைபதைக்க செய்கின்றது

பட்டுக்குட்டி, செல்லக்குட்டி: 'குக் வித் கோமாளி' புகழ் கூறிய பிறந்த நாள் வாழ்த்து யாருக்கு தெரியுமா?

விஜய் டிவியில் சமீபத்தில் முடிவடைந்த 'குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சி மிகப்பெரிய அளவில் பிரபலமானது என்பதும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட 'குக்'கள், கோமாளிகள்,

சேர்ந்து வாழ்வதைவிட பிரிந்து வாழ்வதில் சந்தோஷம்: அப்பா-அம்மா விவாகரத்து குறித்து ஸ்ருதிஹாசன்!

தன்னுடைய அப்பாவும் அம்மாவும் சேர்ந்து வாழ்வதை விட பிரிந்து வாழும் போதுதான் சந்தோசமாக இருந்தார்கள் என நடிகை சுருதிஹாசன் தெரிவித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

இந்த நடிகருடன் ரொமான்ஸ் செய்ய வேண்டும்: சமந்தா தெரிவித்த விருப்பம்!

திருமணத்திற்கு பின்னரும் தமிழ் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் பிஸியாக இருக்கும் நடிகை என்றால் அது சமந்தா தான் என்பது குறிப்பிடத்தக்கது.