அமலாபாலுக்காக பி.சுசீலா பாடிய பக்தி பாடல்
Send us your feedback to audioarticles@vaarta.com
அமலாபால் நடித்த 'ஆடை' படத்தின் டீசர், டிரைலர் ஆகியவை நல்ல வரவேற்பை பெற்று படத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ள நிலையில் இந்த படம் வரும் 19ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது.
இந்த நிலையில் இந்த படத்தில் பழம்பெரும் பாடகி பி.சுசீலா ஒரு பக்திப்பாடலை பாடியுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இந்த பாடல் ஏற்கனவே கடந்த 70 வருடங்களுக்கு முன் அவரே பாடிய ஒரு பாடல் என்றும் தங்கள் படத்திற்காக மீண்டும் அந்த பாடலை அவரது குரலில் பாடி தந்ததற்கு நாங்கள் அவருக்கு கடமைப்பட்டுள்ளோம் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
சென்சாரில் 'ஏ' சர்டிபிகெட் பெற்ற 'ஆடை' படத்தில் அமலாபால், ரம்யா சுப்பிரமணியன், ஆதிராஜ், விவேக் பிரசன்னா, ரோஹித் நந்தகுமார் உள்பட பலர் நடித்துள்ளனர். ரத்னகுமார் இயக்கியுள்ள இந்த படத்திற்கு பிரதீப்குமார் இசையமைத்துள்ளார். விஜய் கார்த்திக்கண்ணன் ஒளிப்பதிவில் உருவாகியுள்ள இந்த படத்தை 'வீ ஸ்டுடியோஸ்' நிறுவனம் தயாரித்துள்ளது.
P.Susheela Mam has sung a Devotional song for our film #Aadai. She sang the same song fr the 1st time 70 years ago. It was a blessing frm god to have her voice in our film. Thank u @pradeepvijay & @thisisoorka #Bakthimetal a Metallic Devotional song up next.@Amala_ams @MrRathna pic.twitter.com/F2j4m3OTx0
— V Studios (@vstudiosoffl) July 11, 2019
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments