பின்னணி பாடகி பி.சுசீலாவுக்கு சிறப்பு விருது: வீட்டிற்கு சென்று வழங்கி கெளரவம்!

  • IndiaGlitz, [Thursday,March 25 2021]

பிரபல பின்னணி பாடகி பி சுசிலாவுக்கு சிறப்பு கலைமாமணி விருது வழங்கப்பட்டது என்பதும் இந்த விருதை அவருடைய வீட்டுக்குச் சென்று இயல் இசை நாடக மன்றத்தின் அதிகாரி வழங்கி கவுரவித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது

கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக பின்னணி இசை பாடகியாக இருந்து வருபவர் பி சுசிலா. இவருக்கு கடந்த 2019ஆம் ஆண்டு ஜெயலலிதாவின் சிறப்பு கலைமாமணி விருது மற்றும் பொற்பதக்கம் அறிவிக்கப்பட்டது. ஆனால் கொரோனா தொற்று காரணமாக மருத்துவர்களின் அறிவுரையை ஏற்று சமீபத்தில் நடந்த விழாவில் அவர் பங்கேற்கவில்லை. இதனால் அவருக்கு அந்த விருது வழங்கப்படாமல் இருந்தது

இந்த நிலையில் இயல் இசை நாடக மன்ற அதிகாரி ஹேமநாதன் அவர்கள் சுசீலா அவர்களின் இல்லத்திற்கு நேரில் சென்று இந்த விருதை வழங்கினார். இதனையடுத்து அந்த விருதை அவர் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டார். ஜெயலலிதாவின் சிறப்பு கலைமாமணி விருதை பெறும் முதல் இசை கலைஞர் பி சுசிலா தான் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து பி சுசிலாவுக்கு இசை ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.