'மெர்சலுக்காக விரைவில் பணம் கொடுப்பேன்: ப.சிதம்பரம்
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய்யின் 'மெர்சல்' படத்தின் ஜிஎஸ்டி வசனம் குறித்த பிரச்சனை குறித்து கருத்து தெரிவிக்காதவர்களே இல்லை என்ற அளவுக்கு இந்த பிரச்சனை தேசிய பிரச்சனையாக உருவாகிவிட்டது. ராகுல்காந்தி, கபில்சிபில் உள்பட தேசிய தலைவர்களே இந்த பிரச்சனை குறித்து கருத்து தெரிவித்துவிட்ட நிலையில் தமிழகத்தில் உள்ள தேசிய தலைவர்களான ப.சிதம்பரம் மற்றும் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர்களின் கருத்து மோதல் ஊடகங்களின் தலைப்பு செய்திகளாகி வருகிறது.
'மெர்சல்' பிரச்சனை நேற்று கருத்து தெரிவித்த ப.சிதம்பரம், 'அரசின் கொள்கைகளை பாராட்டி மட்டுமே படம் எடுக்க வேண்டும் என சட்டம் வந்தாலும் வரலாம்' என கிண்டலாக தனது டுவிட்டரில் ப.சிதம்பரம் கூறியிருந்தார். இதற்கு பதிலளிக்கும் வகையில் பேசிய மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், 'மெர்சல் படத்திற்கு ப.சிதம்பரம் பைனான்ஸ் செய்தாரா? என்றும், உண்மைக்கு புறம்பான விசயங்கள் பரப்புவது தவறு அதுவும் சிங்கபூரையும் இந்தியாவையும் ஒப்பிட்டு பேசுவது ஏற்றுகொள்ள முடியாது என கூறினார்.
இதற்கு பதிலளித்துள்ள ப.சிதம்பரம், 'மெர்சல் படத்தை பணம் கொடுத்து டிக்கெட் வாங்கி படம் பார்ப்பவர்௧ள் ௭ல்லோரும் அந்த படத்திற்கு பணம் கொடுத்தவர்கள் தான். அந்த வகையில் மெர்சலுக்கு பணம் கொடுக்கும் வாய்ப்பு எனக்கும் விரைவில் கிடைக்கும் என பதிலளித்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com