ஆக்சிஜன் அளவை உயர்த்த… இயற்கையான சில உணவு பொருட்கள்!
Send us your feedback to audioarticles@vaarta.com
கொரோனா நேரத்தில் நோயாளிகள் முதற்கொண்டு அரசாங்கம் வரை அனைவரும் பயப்படும் ஒரு விஷயம் ஆக்சிஜன். அதுவும் வயது மூத்த, நீரிழிவு போன்ற இணை நோய் உள்ளவர்களுக்கு இந்த ஆக்சிஜன் பெரும் தலைவலியாக மாறி உயிரிழப்பையே ஏற்படுத்தி விடுகிறது. இந்நிலையில் ஆக்சிஜன் பற்றாக்குறையைப் போக்குவதற்கு எப்படி எளிய உணவு முறைகளைக் கடைப்பிடிப்பது என்பது குறித்தும் மருத்துவர்கள் ஆலோசனை வழங்கி வருகின்றனர்.
பொதுவா ஒரு நபருக்கு 95-100% வரை ஆக்சிஜன் அளவு இருந்தால் அதில் சிக்கல் எதுவும் இல்லை. 94%க்கும் குறையும்போது அதை மருத்துவர்கள் மிகவும் சிக்கலான விஷயமாகப் பார்க்கத் தொடங்கி விடுகின்றனர். இதனால் அந்த நபருக்கு செயற்கையான ஆக்சிஜன் செலுத்தப்படுகிறது. இதுபோன்ற சமயங்களில் இயற்கையாகவே உணவுப் பொருட்களின் மூலம் ஆக்சிஜன் அளவை தக்க வைத்துக் கொள்வதற்கும் மருத்துவர்கள் ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர்.
அந்த வகையில் ஆக்சிஜன் அளவை உட்கிரகித்துக் கொள்ளும் திறன் கொண்ட (Oxygen radical absorption capacity) orac உணவு வகைகளை மருத்துவர்கள் தற்போது பரிந்துரைத்து வருகின்றனர்.
ORAC Value அதிகம் உள்ள மசாலா பொருட்கள்- கிராம்பு, மஞ்சள், பட்டை, சீரகம், சோம்பு, கருவேப்பிலை, பூண்டு, இஞ்சி, துளசி, எலுமிச்சை போன்றவற்றில் ஆக்சிஜனை உட்கிரகித்துக் கொள்ளும் திறன் அதிகம் உள்ளது. இந்தப் பொருட்களை அன்றாடம் உணவில் சேர்த்தோ அல்லது சிலவற்றை காய்த்து குடிக்கும் முறையிலோ பயன்படுத்தும்போது ஆக்சிஜன் அளவை உயர்த்த முடியும்.
பருப்பு உணவுகள்- பட்டாணி, கொண்டக்கடலை, பீன்ஸ், சோயா பீன்ஸ், காராமணி போன்ற தாவரங்கள் ஆக்சிஜனை அதன் வேர் முடிச்சுகளில் தேக்கிவைத்துக் கொள்ளும் தன்மைக் கொண்டவை. இதனால் இந்த பருப்பு வகைகளும் ஆக்சிஜனை உட்கிரகித்துக் கொள்ளும் திறன் கொண்டவையாக இருக்கிறது.
கீரைகளில் பசலை, முருங்கை கீரையில் அதிகம் ஆக்சிஜன் தேக்கி வைக்கும் திறன் உள்ளது.
காய்கள்- குடைமிளகாய், ப்ரோகோலி, கேரட், முள்ளங்கி போன்றவற்றில் ஆக்சிஜன் அளவை உயர்த்தும் திறன் உள்ளது.
பழம் –தர்பூசணி, சாத்துக்குடி, பப்பாளி, அவகோடா, பேரிக்காய், அன்னாசி, ஆப்பிள், மாதுளை போன்ற பொருட்களும் ஆக்சிஜன் லெவலை உயர்த்தும். மேலும் பூசணி விதை, வேர்கடலை, பேரிச்சம்பழம், உலர் திராட்சை, அத்திப்பழம் போன்றவையும் ஆக்சிஜன் அளவை உயர்த்த பயன்படும்.
இதுபோன்ற உணவுகளை அன்றாட உணவிலோ அல்லது தனித்தனியாகவோ பயன்படுத்தும் போது கொரோனா நேரத்தில் ஆக்சிஜன் அளவை தக்க வைத்துக் கொள்வதற்கும் சுவாச உறுப்புகளை திறன் கொண்டதாக மாற்றிக் கொள்வதற்கும் பெரிதும் உதவியாக இருக்கும்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments