கொரோனாவை மிஞ்சி…2020 இல் அதிகம் புழங்கிய வார்த்தைகள்!!!

 

2020 எனும் இந்த வருடத்தை உலக வரலாறு இருக்கும் வரையிலும் மறக்க முடியாது எனும் அளவிற்கு கொரோனா வைரஸ் கடும் தாக்கத்தை ஏற்படுத்தி விட்டது. இந்த மாற்றங்களினால் ஒட்டுமொத்த உலக நாடுகளிலும் சில வார்த்தைகள் மட்டும் அதிகம் புழங்கப்பட்டு இருக்கிறது. அந்த வார்த்தைகளை Oxford Language அகராதி சுட்டிக்காட்டி உள்ளது.

கொரோனா வைரஸின் SAR-Covid-19 என்பதை இந்த உலக மக்கள் அறிவதற்கு முன்பே கொரோனா குடும்பத்தின் வைரஸ்கள் கடந்த 1960 முதல் தாக்கத்தை ஏற்படுத்த தொடங்கிவிட்டது. அப்போது எல்லாம் விஞ்ஞானிகள் மற்றும் மருத்துவர்கள் மட்டுமே அறிந்திருந்த வார்த்தை இந்த வருடத்தில் ஒட்டுமொத்த உலகத்தின் பரபரப்புக்கும் காரணமாக மாறிவிட்டது.

இந்த வருடத்தின் ஏப்ரல் மாதம் வரை ஒட்டுமொத்த உலகத்திலும் அதிகம் புழங்கப்பட்ட வார்த்தை Corona Virus என்பதுதான். இந்த வார்த்தை மே மாதம் முதற்கொண்டு Covid-19 என்ற பதத்தில் அதிகம் புழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதைத்தவிர ஒட்டுமொத்த உலகிலும் அதிகம் புழங்கப்பட்ட மற்றொரு வார்தை Lockdown. Social distance, Mask, Immunity, sanitizer போன்ற வார்த்தைகளும் அதிகமாகப் புழங்கப்பட்டு இருக்கிறது.

இதை விடவும் Work form Home –வீட்டில் இருந்து பணியாற்றுவது, Support Bubble- ஆதரவு குமிழ்கள் போன்ற வார்த்தையும் அதிகம் புழங்கப்பட்டு இருக்கிறது. இந்த வரிசையில் ஒட்டுமொத்த இந்தியாவிலும் ஒரு வார்த்தை அதிகம் புழங்கப்பட்டு இருக்கிறது. அது E-Pass. இந்நிலையில் உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு 5 கோடியை தாண்டி இருக்கிறது. உயிரிழப்புகள் 13,93, 671 ஆக அதிகரித்து இருக்கிறது.