கொரோனா ஒருவழியா முடிவுக்கு வந்துடும் போல… ஆக்ஸ்பேஃர்டு பல்கலைக் கழகத்தின் சிறப்பு அறிவிப்பு!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
உலகளவில் கொரோனா தடுப்பூசி ஆய்வில் தற்போது ஆக்ஸ்பேஃர்டு பல்கலைக் கழகம் முன்னிலை பெற்று வருவதை செய்திகள் எடுத்துக் காட்டுகின்றன. ஆக்ஸ்பேஃர்டு பல்கலைக் கழகம் மற்றும் அஸ்ட்ராஜென்க்கா மருந்து நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசி உடலில் கொரோனா வைரஸ்க்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்குவதோடு டி செல்லையும் சேர்த்து உருவாக்குவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் வைரஸ்க்கு எதிரான நோய் எதிர்ப்பு ஆற்றல் உடலில் எவ்வளவு நாள் இருக்கும் என்று உறுதியாக தெரியாது ஆனால் டி செல்கள் ஓராண்டிற்கும் மேலாக உடலில் நோய் எதிர்ப்பு ஆற்றலை தக்க வைக்கும் எனவும் விஞ்ஞானிகள் குறிப்பிட்டு இருந்தனர்.
தற்போது ஆக்ஸ்பேஃர்டு பல்கலைக் கழகத்தின் கொரோனா தடுப்பூசி இரண்டாம் கட்ட ஆய்வை முடித்து கொண்டு 3 ஆம் கட்ட சோதனைக்கு தயாராகி இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனாலும் வைரஸ்க்கு எதிராக நோய் எதிர்ப்பு ஆற்றல் உடலில் எவ்வளவு நாள் தங்கியிருக்கும் என்பதையும் உறுதியாகக் கூற முடியாது எனச் சில விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர். இந்தத் தடுப்பூசி ரிப்லிகேட்டிஸ் வைரல் வெக்டர் என அழைக்கப் படுகிறது. மேலும் இந்த தடுப்பூசி மற்ற தடுப்பூசிகளைப் போல கொரோனா வைரஸின் ஆற்றல் இழந்த வைரஸைக் கொண்டு உருவாக்கப் பட்டதல்ல என்பதும் குறிப்பிடத்தக்கது.
மனித குரங்குகளின் நோயை ஏற்படுத்தும் வைரஸான அடினோ வைரஸ் என்பதைக் கொண்டு கொரோனா வைரஸ்க்கு எதிராக தடுப்பூசியை ஆக்ஸ்பேஃர்டு பல்கலைக் கழக விஞ்ஞானிகள் தயாரித்து உள்ளனர். இந்த அடினோ வைரஸ் மனித உடலில் புதிய நோய்த்தொற்றை ஏற்படுத்தாது என்பதையும் அந்த விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தி உள்ளனர். மேலும் அடினோ வைரஸ் என்பது கொரோனா வைரஸில் உள்ள ஸ்பைக் எனப்படும் புரத்தைத்தை தாக்கி அழிக்கும் தன்மைக் கொண்டது. கொரோனா வைரஸில் உள்ள ஸ்பைக் புரதம் ஒருவரின் உடலில் நுழைந்து பல்லாயிரக் கணக்காக உற்பத்தி செய்து கொள்வதற்கு உதவுகிறது. இத்தகைய ஆபத்தான கொரோனா வைரஸின் ஸ்பைக் புரத்தைத் தாக்கி அழிக்கும் வகையில் தற்போது தடுப்பூசி கண்டுபிடிக்கப் பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் புதிதாகக் கண்டுபிடிக்கப் பட்டுள்ள கொரோனா தடுப்பூசியை உடலில் செலுத்திய அடுத்த 28 நாட்களுக்குள் வைரஸ்க்கு எதிராக உடலில் நோய் எதிர்ப்பு ஆற்றல் ஏற்படுவதாகவும் விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டு கின்றனர். அதோடு புற்றுநோயைக் குணப்படுத்தும் ஆற்றல் உடைய டி செல்கள் உருவாக்கப் படுவதாகவும் ஆய்வில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. தற்போது இந்த தடுப்பூசி 3 ஆம் கட்டச் சோதனையில் இருப்பதால் இந்த ஆண்டின் இறுதிக்குள் கொரோனா தடுப்பூசி மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரமுடியும் எனவும் ஆக்ஸ்பேஃர்டு பல்கலைக் கழகத்தின் விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர். அதைத் தவிர இந்தப் பல்கலைக் கழகம் தயாரித்த கொரோனா தடுப்பூசியை இந்தியாவில் சோதனை செய்து பார்ப்பதற்கும் அனுமதி கோரப் பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் 100 கோடி அளவிலான கொரோனா தடுப்பூசியை இந்தியாவில் தயாரிக்கவும் இந்தியாவின் சீரம் இண்ஸ்டியூட் வுடன் ஒப்பந்தம் செய்யப் பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments