ஆக்ஸ்போர்டு அகராதியின் உதாரணத்தில் அஜித் பெயர்
- IndiaGlitz, [Thursday,October 26 2017]
உலகம் முழுவதும் அகராதி என்றால் முதலில் அனைவருக்கும் ஞாபகம் வருவது ஆக்ஸ்போர்டு அகராதி என்பது அனைவரும் அறிந்ததே. இந்த நிலையில் சமீபத்தில் ஆக்ஸ்போர்டு அகராதியில் பல மொழிகளில் உள்ள முக்கிய வார்த்தைகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில் ஒன்று தமிழ் வார்த்தையான 'அண்ணா' என்பது
இந்த வார்த்தைக்கு விளக்கம் அளித்துள்ள ஆக்ஸ்போர்ட் அகராதி தெற்காசியாவில் இந்த வார்த்தைக்கு மூத்த சகோதரர் என்பதை குறிப்பதாக குறிப்பிட்டுள்ளது. அதுமட்டுமின்றி வாக்கியங்களால் இந்த வார்த்தையை குறிப்பிட்டு விளக்கியபோது, 'நான் அஜித் அண்ணாவுடன் நடிக்க விரும்புகிறேன்' (I got to act with Ajith anna) என்று கூறப்பட்டுள்ளது.
அறிஞர் அண்ணா முதல் எத்தனையோ பேர் 'அண்ணா' பெயரை பயன்படுத்தியபோதிலும், ஆக்ஸ்போர்டு அகராதி உதாரணத்திற்கு அஜித் பெயரை எடுத்துள்ளது என்பது அவரது பெயர் உலகளாவிய அளவில் என்பதை குறிப்பதாக கருதப்படுகிறது.