பண்ண மாட்டேன், முடியாது: ஷாரிக்குடன் மல்லுகட்டும் மும்தாஜ்
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒன்பதாவது நாளான நேற்று எஜமானர்-வேலைக்காரி என்ற டாஸ்க் லக்சரி பட்ஜெட்டுக்காக கொடுக்கப்பட்டது. இந்த டாஸ்க்கில் ஆண்கள் எஜமானர்களாகவும், பெண்கள் வேலைக்காரிகளாகவும் நடிக்கவேண்டும்.
இந்த டாஸ்க்கை டாஸ்க்காக மட்டும் மற்ற பெண் போட்டியாளர்கள் எடுத்து கொண்டிருக்கும் நிலையில் மமதி மற்றும் மும்தாஜ் மட்டும் ஒருசில கண்டிஷன்கள் போட்டதால் பிரச்சனை ஏற்படுகிறது என்பது சற்றுமுன் வெளியான புரமோ வீடியோவில் இருந்து தெரியவந்துள்ளது.
எஜமானர்கள் கொடுக்கும் வேலையை சிறிதும் விருப்பம் இல்லாமல் செய்து வரும் மும்தாஜ், மமதி ஒரு கட்டத்தில் சில வேலைகளை செய்ய முடியாது என்று கூறுகின்றனர். குறிப்பாக மும்தாஜ் எவ்வளவு மணி நேரம் வேலை செய்யவில்லையோ, அத்தனை மணி நேரம் நீச்சல்குளத்தை சுத்தம் செய்ய வேண்டும் என்று ஷாரிக் கூற அதற்கு மும்தாஜ் முடியாது என்று கூறுகிறார். மீண்டும் ஷாரிக் செய்தே ஆக வேண்டும் என்று கூற மும்தாஜ் மீண்டும் பண்ண முடியாது என்று கூறுகிறார். இதனால் பிக்பாஸ் வீடே அதிர்ச்சியில் உள்ளது.
அதே சமயம் எஜமானர்களாக இருக்கும் ஆண் போட்டியாளர்களும் கொஞ்சம் ஓவராகத்தான் நடந்து கொள்கின்றனர். எந்த வீட்டில் வேலைக்காரி எஜமானரின் கைகால்களை அமுக்கிவிடுவார்? இவர்கள் எந்த நூற்றாண்டில் உள்ளனர் என்பதே தெரியவில்லை. டாஸ்க் என்றாலும் ஒரு லிமிட் வேண்டும் என்று மும்தாஜ் சொல்வதிலும் ஒரு நியாயம் இருப்பதாகவே தெரிகிறது என மும்தாஜ் ஆர்மியினர் கூறி வருகின்றனர். டாஸ்க்கை சரியாக செய்யாவிட்டால் தண்டனையாம். என்ன தண்டனை என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
#பிக்பாஸ் இல்லத்தில் இன்று.. #BiggBossTamil - தினமும் இரவு 9 மணிக்கு உங்கள் விஜயில்.. #VivoBiggBoss @Vivo_India pic.twitter.com/jKjsAkyE2t
— Vijay Television (@vijaytelevision) June 27, 2018
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments