close
Choose your channels

ஓவியாவின் புதிய ஹேர்ஸ்டைலுக்கு பின் உள்ள ரகசியம்

Friday, August 11, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நாயகி ஓவியா, மன அழுத்தம் காரணமாக அந்த வீட்டை விட்டு வெளியேறிய பின்னர் முழு ஓய்வு எடுத்து வருகிறார். இதுவரை வெளியேறியவர்கள் போல் இல்லாது, இன்னும் ஓவியா குறித்தே சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி விஷ்ணுவின் 'சிலுக்குவார்ப்பட்டி சிங்கம்', விஜய்யின் 62வது படம் உள்பட பல படங்களில் அவரை நடிக்க வைக்க முயற்சிகள் நடந்து வருவதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது.

இந்த நிலையில் ஓவியா கடந்த இரண்டு நாட்களுக்கு முன் திடீரென ஹாலிவுட் நடிகை நடாலி டார்மர் அவர்களின் ஹேர்ஸ்டைலுக்கு மாறியதாக புகைப்படத்துடன் கூடிய செய்தி வெளியானது. ஓவியாவின் இந்த ஹேர் ஸ்டைல் மாற்றத்திற்கு ஹாலிவுட் பட வாய்ப்பு வந்ததே காரணம் என்றும் கூறப்பட்டது.

ஆனால் ஓவியாவின் மன அழுத்தம் பூரண குணமடைய கப்பிங் தெரபி என்ற சிகிச்சை அவருக்கு அளிக்கப்பட்டதாகவும், இந்த சிகிச்சை அளிப்பவர்களுக்கு காதுக்கு மேல் ஒரு சிறிய சர்ஜரி செய்யப்படும் என்றும் அதன் காரணமாகவே காதுக்கு மேலே உள்ள முடி அகற்றப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த தகவலை உறுதி செய்யும் வகையில் ஓவியாவின் காது பகுதிக்கு மேலே சிவப்பு நிறத்தில் தழும்பும் இருப்பதையும் பார்க்கலாம். எனவே ஓவியாவின் புதிய ஹேர்ஸ்டைலின் ரகசியம் இதுவே என்றும் தெரிகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment