ரஜினி, அஜித்துடன் ஓப்பிடப்படும் ஓவியா! நெட்டிசன்களின் கலக்கல்
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒரே ஹீரோ ஓவியா தான் என்று நேயர்களால் பார்க்கப்பட, அவருக்கு குவிந்து வரும் அமோக ஆதரவால் நிச்சயம் அவர் இந்த நிகழ்ச்சியின் வெற்றியாளராக மாறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக நெட்டிசன்களால் கலாய்க்கப்படாத ஒரே நபராகவும், ரஜினி, அஜித்துடன் ஒப்பிடப்பட்டு மிமி கிரியேட் செய்யப்படும் அளவிற்கு ஓவியா வலம் வந்து கொண்டிருக்கின்றார்.
நேற்றைய நிகழ்ச்சியில் சக்தியிடம் 'எங்கே அறைங்க பார்க்கலாம்' என்று கெத்தாக ஓவியா கூறிய அந்த வசனம், 'தளபதி' படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், போலீஸ் அதிகாரி கிட்டியிடம் 'எங்கே தொட்றா பார்க்கலாம்' என்ற வசனத்திற்கு இணையானது என்று நெட்டிசன்கள் மிமி கிரியேட் செய்துள்ளனர்.
அதேபோல் காயத்ரியிடம் கோபித்து கொண்டு ஓவியா நடந்து சென்ற காட்சி, 'கபாலி' படத்தில் ரஜினி 'நெருப்புடா' பாடலுக்கு ஆக்ரோஷமாக நடந்து சென்ற காட்சிக்கு இணையானது என்று இன்னொரு நெட்டிசன் பதிவு செய்துள்ளார். மேலும் இதே காட்சியை 'பில்லா 2' படத்தில் அஜித் நடந்து வரும் காட்சிக்கு இணையாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com