ஓவியாவின் பொறுமையை சோதித்த ஜூலி: முதன்முதலாக ஆத்திரப்பட்ட ஓவியா
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பமான முதல் நாளில் இருந்து புன்சிரிப்புடன் கள்ளங்கபடம் இல்லாமல் இருக்கும் ஒரே பங்கேற்பாளர் ஓவியா தான் என்பது அனைவரின் கருத்தாக உள்ளது.
பேச்சுவார்த்தையின் போது பிரச்சனை வரும் என்று தெரிந்தால் உடனே எழுந்து வெளியே போய் விடும் ஓவியாவின் நடவடிக்கையால் மேற்கொண்டு பிரச்சனை பெரிதாகாமல் தடுக்கப்பட்டதாகத்தான் நேயர்களின் பார்வையில் இருந்து தெரிகிறது.
ஆனால் அப்படிப்பட்ட பொறுமையின் சிகரமான ஓவியாவை நேற்று ஜூலி பொங்கி எழ வைத்துவிட்டார். ஜூலி வயிற்று வலியால் துடித்தபோது, எல்லோரும் அவர் நடிப்பதாக கூறியபோது ஓவியா மட்டுமே கட்டிப்பிடித்து ஆறுதல் கூறினார். ஆனால் அந்த நன்றி கூட இல்லாம ஓவியாவுக்கு எதிராக காய் நகர்த்தும் ஜூலி மீது வெறுப்பு வருவதை தவிர்க்க முடியவில்லை.
நேற்றைய நிகழ்ச்சியில் விடிய விடிய ஓவியாவை தூங்க விடாமல் அவரை குத்திக்காட்டும் வகையில் ஜூலி பாட்டு பாடிய நிலையில் ஓவியா முதன்முதலில் ஆத்திரப்பட்டு ஜூலியை 'போடீ' என்று கூறிவிட்டார். வாடி போடி என்று பேசும் வேலையை என்கிட்ட வச்சுக்காதே என்று ஜூலி கூறியபோது மீண்டும் 'போடீ' என்று ஆத்திரத்துடன் ஓவியா கூறினார். ஓவியாவின் பொறுமையை சோதித்த ஜூலிக்கு இன்று கமல் தக்க தண்டனை கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments