'களவாணி 2' படத்தில் ஓவியா நடிக்கின்றாரா? விமல் விளக்கம்

  • IndiaGlitz, [Saturday,September 09 2017]

பிக்பாஸ் நிகழ்ச்சியில் மூலம் உலகப்புகழ் பெற்ற ஓவியாவுக்கு இன்று லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். அவரது ஒரே ஒரு டுவிட்டர் ஸ்டேட்டஸூக்கு லைக்குகள் குவிந்து வருவதில் இருந்தே இதை தெரிந்து கொள்ளலாம்

இந்த நிலையில் ஓவியாவின் அடுத்த படம் குறித்த அறிவிப்பை எதிர்நோக்கி அவரது ரசிகர்களும் ஓவியா ஆர்மியினர்களும் காத்திருக்கின்றனர்.

இந்த நிலையில் ஓவியா நடித்த 'களவாணி' படத்தின் இரண்டாம் பாகமான 'களவாணி 2' படத்தில் அவர் நடிக்கவிருப்பதாக கடந்த சில நாட்களாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது.

இதுகுறித்து 'களவாணி 2' படத்தின் நாயகனும், தயாரிப்பாளருமாகிய விமல் பேட்டி ஒன்றில் கூறியபோது, 'களவாணி 2 படத்தின் ஷூட்டிங் அடுத்த மாதம் ஆரம்பமாகும். தஞ்சாவூரில் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளோம். இந்தப் படத்தில் நாயகி ரோலில் ஓவியா நடிக்கவில்லை. புதுமுகம் ஒருவர்தான் இந்தப் படத்தில் கதாநாயகியாக நடிப்பார். படத்தில் நடிக்கும் பிற நடிகர், நடிகைகள் பற்றிய விவரம் விரைவில் தெரிவிக்கப்படும்' என்று தெரிவித்தார்.