close
Choose your channels

ஓவியாவின் #GobackModi டுவிட்டிற்கு இதுதான் காரணமா?

Wednesday, February 17, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தேர்தல் நடைபெறும் நேரங்களில் திடீரென அரசியல் கட்சிகளுக்கு நடிகர்-நடிகைகள் பிரச்சாரம் செய்வது வழக்கமான ஒன்று. இந்த நிலையில் வரும் தேர்தலில் திமுகவுக்கு ஆதரவாக நடிகை ஓவியா பிரச்சாரம் செய்ய இருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

திமுகவுக்கு தேர்தல் ஆலோசனை கூறி வரும் ஐபேக் நிறுவனம் ஓவியாவை பிரச்சாரம் செய்ய ஒப்பந்தம் செய்திருப்பதாகவும், திமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய ரூபாய் ஒரு கோடி ஓவியாவுக்கு வழங்கப்பட இருப்பதாகவும் ஒரு வதந்தி மிக வேகமாக பரவி வருகிறது. இதற்கு முன்னோட்டமாக தான் சமீபத்தில் பிரதமர் மோடி சென்னைக்கு வருகை தந்தபோது #GobackModi என்ற ஹேஷ்டேக்கை ஓவியா தனது டுவிட்டரில் பதிவு செய்ததாகவும் இதுவும் ஐபேக் நிறுவனத்தின் ஆலோசனையின் பேரில்தான் ஓவியா டுவிட் செய்ததாகவும் கூறப்படுகிறது

ஓவியாவின் இந்த டுவிட்டுக்கு ஐபேக் நிறுவனம் எதிர்பார்த்தது போலவே பாஜகவினர் எதிர்ப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் என்றும், பாஜகவின் எதிர்ப்புதான் அவர்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி என்றும் கூறப்படுகிறது. ஆனாலும் இது குறித்து எந்தவிதமான அதிகாரப்பூர்வ தகவலும் வெளிவரவில்லை என்பதால் திமுகவுக்கு ஆதரவாக ஓவியா பிரசாரம் செய்வாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment