பிரியாணிக்காக சேர்ந்த கூட்டம் அல்ல, தானா சேர்ந்த கூட்டம். ஓவியா
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் வீட்டின் செல்லப்பிள்ளை ஓவியாவுக்கு சமூக வலைத்தளங்களில் மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் இருக்கும் நிலையில் தினமும் அவர் ஏதாவது ஒரு விஷயத்திற்காக டிரெண்டில் உள்ளார். இந்த நிலையில் சமீபத்தில் அவர் பேசிய வீடியோ ஒன்று சமூக இணையதளங்களில் வெளியாகியுள்ளது.
எனக்கு கிடைத்துள்ள ரசிகர்கள் நான் சொல்லி வந்த கூட்டம் அல்ல, தானாகவே சேர்ந்த கூட்டம். நான் பிரியாணி கொடுத்து அழைத்த வந்த கூட்டம் இல்லை. இப்போது கூட எனக்கு ஏதாவது பிரச்சனை என்றால் என்னால் யாருடைய வீட்டிற்கும் சென்று லஞ்ச் சாப்பிட்டுவிட்டு திரும்ப முடியும்' என்று ஓவியா ஒரு வீடியோ பேட்டியில் கூறியுள்ளார்.
ஓவியாவின் இந்த வீடியோ பேட்டி நேற்று மாலை முதல் சமூக வலைத்தளங்களில் டிரெண்ட் ஆகியுள்ளது. ஓவியாவின் ஆர்மியினர், புரட்சிப்படையினர் இந்த வீடியோவை ஷேர் செய்து வைரலாக்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout