இன்று ஒவ்வொருவரும் பெருமைப்படும் நாள்: ஓவியா
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகை ஓவியா சற்றுமுன் தனது சமூக வலைத்தளத்தில் 'இன்று ஒவ்வொரு இந்தியனும் பெருமிப்பட வேண்டிய நாள்' என்று ஒரு டுவீட்டை பதிவு செய்துள்ளார். இந்த டுவீட்டை முழுமையாக படிக்காத ஒருசிலர் இன்று ஓவியாவின் ''90ml' திரைப்படம் ரிலீசைத்தான் அவர் பெருமையாக கூறுவதாக அவசரப்பட்டு கமெண்ட்டுக்களை பதிவு செய்து வருகின்ற்னர்.
ஆனால் ஓவியா தனது டுவிட்டில் கூறியது இதுதான்: 'இன்று ஒரு வரலாற்று சிறப்புமிக்க ஒவ்வொரு இந்தியனும் பெருமைப்பட வேண்டிய நாள். விங் கமாண்டர் அபிநந்தன் வர்தாமான் இந்தியா திரும்பும் நாள். அவர் விடுதலையான இந்த நாளை பொதுமக்கள் திருவிழா போல் கொண்டாடி வருவதை பார்க்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது. அபிநந்தனின் வீரத்திற்கு ஒரு சல்யூட். அவருக்கும் அவருடைய குடும்பத்தினர்களுக்கும் கடவுளின் ஆசி எப்போதும் இருக்கும். ஜெய்ஹிந்த்! என்று பதிவு செய்துள்ளார்.
ஓவியாவின் இந்த டுவீட்டை பெரும்பாலானோர் பாராட்டி வருகின்றனர். இருப்பினும் ஒருசிலர் அவர் ''90ml' போன்ற படத்தில் நடித்தது குறித்து தங்களது அதிருப்தியையும் தெரிவித்து வருகின்றனர். இருப்பினும் ஓவியாவின் தேசப்பற்றை வெளிப்படுத்தும் விதமாக அவர் பதிவு செய்துள்ள முதல் டுவீட் இதுதான் என்பதையும் சிலர் குறிப்பிட்டுள்ளனர்.,
This is a historic & most proud moment for every Indians to receive Wing Commander Abhinandan Varthaman. a BIG SALUTE to Wing Commander Abhinandan Varthaman for his brave and courageous move, god bless him & his family, JAI HIND????
— Oviyaa (@OviyaaSweetz) March 1, 2019
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments