கமல் அரசியலுக்கு வந்தால் ஆதரவு: நடிகை ஓவியா

  • IndiaGlitz, [Thursday,October 19 2017]

பிக்பாஸ் புகழ் ஓவியா இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கமல்ஹாசன் அரசியலுக்கு வருவதை ஆதரிப்பதாக தெரிவித்துள்ளார். 

இந்த பேட்டியின்போது அவர் மேலும் கூறியதாவது: பிக்பாஸ் நிகழ்ச்சி தான் என்னை பிரபலப்படுத்தியது. எனக்கு வாக்களித்த அனைவருக்கும், பிக்பாஸூக்கும், மீடியா நண்பர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். 

என்னை இந்த அளவுக்கு பிரபலப்படுத்திய மக்களுக்கு நான் எதாவது கண்டிப்பாக செய்வேன். ஏற்கனவே நான் இதுகுறித்து பிக்பாஸ் நிகழ்ச்சியின்போதே வாக்குறுதி அளித்துள்ளேன். மக்களுக்காக ஏதாவது செய்வதில் எனக்கு தனிப்பட்ட முறையில் சந்தோஷம் கிடைக்கும் என்பதால் மக்களுக்காக செய்கிறேன் என்று சொல்வதை விட எனக்காக செய்கிறேன் என்றும் கூறலாம். இதுகுறித்த அறிவிப்பை மிக விரைவில் அறிவிப்பேன்' என்று கூறினார்.

மேலும் தனக்கு அரசியல் பற்றி ஒன்றுமே தெரியாது என்றும், தான் எந்த கட்சியிலும் இல்லை என்று கூறிய ஓவியா, கமல் அரசியலுக்கு தகுதியானவர் என்றும் அவரை பற்றி தனக்கு நன்கு தெரியும் என்பதால் அவர் அரசியலுக்கு வருவதை ஆதரிப்பதாகவும் ஓவியா தெரிவித்தார். 

More News

சிலுக்குவார்ப்பட்டி சிங்கம் படப்பிடிப்பில் ஓவியா! வைரலாகும் ஸ்டில்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் உலக தமிழர்களின் மனதில் குடிபுகுந்த நடிகை ஓவியா, அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பின்னர் 'காஞ்சனா 3' மற்றும் 'சிலுக்குவார்ப்பட்டி சிங்கம்'

தமிழிசையின் 'மெர்சல்' ஜிஎஸ்டி கருத்துக்கு திருமாவளவன் பதில்

தளபதி விஜய் நடித்த 'மெர்சல்' படத்தின் கடைசி காட்சியில் இடம்பெற்ற ஜிஎஸ்டி வசனம் மற்றும் டிஜிட்டல் இந்தியா குறித்த வசனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜன்,

கபாலியை முந்திய 'மெர்சல்' முதல் நாள் வசூல்

தளபதி விஜய் நடித்த 'மெர்சல்' திரைப்படம் நேற்று வெளியாகி பெருவாரியான பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று நல்ல வசூலை அள்ளியது

நிலவேம்பு கசாயம் சர்ச்சை: கமல்ஹாசனுக்கு சித்த மருத்துவர்கள் சங்கம் கண்டனம்

கமல்ஹாசன் தனது டுவிட்டரில் பதிவு செய்யும் கருத்துக்களுக்கு பொதுமக்களின் அமோக ஆதரவை பெற்ற நிலையில் முதன்முதலாக அவருடைய டுவீட் ஒன்றுக்கு பொதுமக்கள் தரப்பில் இருந்தும் கண்டனங்கள் குவிந்து வருகிறது.

நிலவேம்பு டுவீட்: கமல் மீது கமிஷனர் அலுவலகத்தில் புகார் 

டெங்கு காய்ச்சலுக்காக விநியோகம் செய்துவரும் நிலவேம்பு குடிநீர் குறித்து கமல் நேற்று தனது டுவிட்டரில் பதிவு செய்திருந்த டுவிட்டுக்களுக்கு ஏற்கனவே பாஜக தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வரும்