ஓவியாவின் லேட்டஸ்ட் அன்பு டுவீட், குவியும் லைக்ஸ்
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் தமிழ் நாட்டு மக்களின் அன்புக்குரியவராக மாறிவிட்டவர் ஓவியா ஒருவர்தான். பிக்பாஸ் இரண்டாவது பாகம் முடிவடைந்தபோதிலும் இன்னும் ஓவியா மீதுள்ள அன்பு யாருக்கும் குறையவில்லை. அதுமட்டுமின்றி ஓவியா ஆர்மியினர் இன்னும் சுறுசுறுப்பாக சமூக வலைத்தளங்களில் இயங்கி வருகின்றனர்.
இந்த நிலையில் ஓவியா சற்றுமுன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் டுவீட் ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில் 'இன்னும் என் மீது அன்பும் , நம்பிக்கையும் கொண்டுள்ள அனைவருக்கும் நன்றி. உங்களின் அன்பு தான் என்னை வலிமைப்படுத்தி, முன்னோக்கி கொண்டு செல்கிறது' என்று பதிவு செய்துள்ளார்.
திடீரென எதற்கு இந்த அன்பு டுவீட் என்று ஓவியாவின் ரசிகர்கள் சற்று குழப்பம் அடைந்தாலும் வழக்கம்போல் இந்த டுவீட்டுக்கும் ஆயிரக்கணக்கில் லைக்ஸ்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments