ஓவியா எந்தெந்த படத்தில் நடிக்கிறார்: அவரே அளித்த பதில்

  • IndiaGlitz, [Sunday,October 08 2017]

பிக்பாஸ் புகழ் ஓவியா பல படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாகவும், ஒருசில படங்களில் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் பல செய்திகள் அடுக்கடுக்காக தினந்தோறும் வந்து கொண்டிருக்கின்றன. ஆனால் ஓவியா நடிக்கும் படம் எவை எவை என அதிகாரபூர்வ செய்திகள் வெளிவந்ததாக தெரியவில்லை

இந்த நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் தான் நடிக்கும் படங்கள் குறித்து கூறிய ஓவியா, 'இப்போதைக்கு நான் 'காஞ்சனா 3' படத்தில் மட்டுமே நடிக்க ஒப்பந்தமாகியுள்ளேன். மற்ற படங்களில் நான் நடிக்கவிருப்பதாக வந்துகொண்டிருக்கும் செய்திகள் அனைத்தும் வதந்தியே என்று கூறினார்

மேலும் தனக்கு பெர்சனலாக பேய் மீது நம்பிக்கை இல்லை என்றாலும் த்ரில் படங்கள் பிடிக்கும் என்றும் அதில் தான் அடுத்து என்ன வரும் என்ற எதிர்பார்ப்பு இருக்கும் என்று கூறிய ஓவியா 'காஞ்சனா படத்தின் இரண்டு பாகங்களும் தனக்கு பிடித்த படங்கள் என்பதால் அந்த படத்தில் நடிக்க எனக்கு வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சியே என்றும் கூறினார். 

'காஞ்சனா 3' படத்தில் ஓவியாவுடன் வேதிகாவும் நடிக்கின்றார். இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்புடன் நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

தியேட்டர் டிக்கெட் உயர்வு சரியா?

கடந்த ஜூலை 1 முதல் ஜிஎஸ்டி வரி அமல்படுத்தப்பட்டபோது திரையரங்கு கட்டணங்கள் ரூ.120ல் இருந்து ரூ.150 ஆக உயர்ந்தது. இதனால் திரையரங்குகளுக்கு வரும் ரசிகர்களின் எண்ணிக்கை குறைந்துள்ள

தளபதியின் 'மெர்சல்' படத்தின் ரன்னிங் டைம் எவ்வளவு தெரியுமா?

தளபதி விஜய் நடித்துள்ள 'மெர்சல்' திரைப்படம் வரும் தீபாவளி முதல் உலகம் முழுவதும் பிரமாண்டமாகவும், அதிக அளவிலான திரையரங்குகளிலும் வெளியாக உள்ளது.

குடிபோதையில் கார் ஓட்டிய வழக்கு: ஜெய்க்கு வழங்கப்பட்ட தண்டனை விபரம்

நடிகர் ஜெய் கடந்த சில நாட்களுக்கு முன்னர் குடிபோதையில் கார் ஓட்டி அடையாறு அருகே விபத்து ஏற்படுத்தியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கு நேற்று சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

வாழ்க்கையை திரைப்படம் போல நினைத்தீர்களா? நடிகர் ஜெய்க்கு நீதிபதி சரமாரி கேள்வி

குடிபோதையில் வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்திய வழக்கில், நடிகர் ஜெய் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நேற்று ஆஜராகாததை அடுத்து அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டது.

திரையரங்குகள் கட்டணத்தை உயர்த்த தமிழக அரசு அனுமதி: ரசிகர்கள் அதிருப்தி

திரைத்துறையினர்கள் ஜிஎஸ்டி வரி மட்டுமின்றி தமிழக அரசின் கேளிக்கை வரியும் கட்ட வேண்டிய நிலை இருப்பதை அடுத்து நேற்று முதல் புதிய திரைப்படங்கள் திரையிடப்படுவதில்லை