என்னை பற்றி பரவும் வதந்திகளில் உண்மை இல்லை: ஓவியா
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் ரசிகர்களின் பேராதரவை பெற்று பெரும்புகழ் பெற்ற ஓவியாவுக்கு கோலிவுட் திரையுலகிலும் நல்ல வாய்ப்புகள் கிடைத்தது. அவர் தற்போது ராகவா லாரன்ஸ் நடித்து இயக்கும் 'காஞ்சனா 3', களவாணி 2' மற்றும் 90ml' ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் பிக்பாஸ் புகழை பயன்படுத்தி ஓவியா தனது சம்பளத்தை கிடுகிடுவென உயர்த்திவிட்டதாகவும், இதனால் அவருக்கு கிடைக்கவிருந்த முக்கிய படங்கள் கைநழுவி போனதாகவும் சமூக வலைத்தளங்களில் வதந்திகள் பரவியது. அதேபோல் சம்பள பிரச்சனை காரணமாக 'களவாணி 2' படத்திலும் நாயகி மாற்றப்பட்டதாகவும் கூறப்பட்டது
இந்த நிலையில் இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஓவியா தனது விளக்கத்தை அளித்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் தான் சம்பளத்தை உயர்த்தவில்லை என்றும், எந்த தயாரிப்பாளரிடமும் இவ்வளவு சம்பளம் வேண்டும் என்று தான் பேரம் பேசியது கிடையாது என்றும் நல்ல கதையை மட்டுமே தான் எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் 'களவாணி 2' படத்தில் தான் நீக்கப்பட்டதாக வெளிவந்துள்ள செய்தியிலும் உண்மையில்லை என்றும், அந்த படத்தில் நான் தான் ஹீரோயின் என்றும் ஓவியா கூறியுள்ளார். ஓவியாவின் இந்த விளக்கத்தை அடுத்து அவரை பற்றிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தாகிவிட்டதாகவே கருதப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments