பிக்பாஸ் ஒப்பந்தம் குறித்து ஓவியாவின் பரபரப்பு தகவல்!

பிக்பாஸ் மூலம் உலக தமிழர்களின் மனதில் இடம் பிடித்த நடிகை ஓவியா திடீரென கடந்த சில நாட்களுக்கு முன்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டுமா? என்ற கேள்வியை எழுப்பியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

டிஆர்பிக்காக போட்டியாளர்களை டார்ச்சர் செய்து அவர்கள் தற்கொலை செய்ய முயற்சிக்கும் நிலைக்குக் கொண்டு செல்ல மாட்டார்கள் என்று தான் நம்புவதாகவும், பிக்பாஸ் நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும் என்று விரும்புகிறீர்களா? என்றும் அவர் ரசிகர்களிடம் கேள்வி எழுப்பி இருந்தார். இந்த கேள்விக்கு ரசிகர்கள் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நெட்டிசன் ஒருவர் இது குறித்து ஒரு கேள்வியை எழுப்பியுளார். பணம் புகழ் ஆகியவை வருகிறது என்பதற்காக கண்மூடித்தனமாக ஒப்பந்தங்களில் கையெழுத்து விடுகிறீர்கள். அதன் பின்னர் அதன் விளைவுகள் குறித்து அறிக்கைகள் வெளியிடுகிறீர்கள். அதற்கு பதிலாக நீங்கள் ஒப்பந்தத்தை முழுமையாக படித்துவிட்டு அதன் அபாயங்களை மதிப்பீடு செய்து அதன் பின்னர் கையெழுத்திடலாமே? என்ற கேள்வியை எழுப்பியுள்ளார்.

இந்த கேள்விக்கு பதில் கூறியுள்ள நடிகை ஓவியா ’ஒரு ஒப்பந்தம் என்பது ஒருவரை மன அழுத்தத்திற்கு உண்டாக்குவதற்கான உரிமை இல்லை. தற்கொலை செய்துகொள்வதற்கான உரிமையாக அதைக் கருதக் கூடாது. ஒவ்வொருவருடைய வாழ்க்கையும் முக்கியமானது என்றும் கூறினார். மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டுமென்று நான் சொல்லவில்லை. குறைந்தபட்சம் போட்டியாளர்களிடம் கருணை காட்டுங்கள் என்று தான் நான் கூறுகிறேன். நாம் அனைவரும் மனிதர்கள் தானே’ என்று பதிவு செய்துள்ளார். ஓவியாவின் இந்த கருத்து தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

More News

தலைமறைவான சூர்யாதேவி மீது மேலும் 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு

கடந்த சில வாரங்களாக கொரோனா பரபரப்பையும் மீறி வனிதா விஜயகுமார்-பீட்டர் பால் திருமணம் ஊடகங்களில் தலைப்பு செய்தியாக வெளியானது என்பதும்

சென்னைக்கு ரூ.18 கோடி, திருத்தணிக்கு ரூ.109 கோடி: அடுக்கடுக்காக திட்டங்களைச் செயல்படுத்தும் தமிழக முதல்வர்!!!

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள ரூ.18.24 மதிப்பிலான சுகாதார மையக் கட்டிடங்களை காணொலி காட்சி மூலம் திறந்து வைத்திருக்கிறார்.

பாலிவுட் குறித்த ஏ.ஆர்.ரஹ்மானின் குற்றச்சாட்டு: ஆதரவு அளித்த தமிழக அமைச்சர்!

பாலிவுட் திரையுலகில் வாரிசுதாரர்களின் ஆதிக்கம் அதிகம் என்றும், புதியவர்கள் பாலிவுட்டில் நுழைந்தால் அவர்களுக்கு கடும் எதிர்ப்பு கிளம்புவதாகவும்

அடுக்குமாடி குடியிருப்பில் சூதாட்டம்: தமிழ் ஹீரோ சிக்கியதால் பரபரப்பு

அடுக்குமாடி குடியிருப்பில் சூதாட்டம் நடத்தியதை அடுத்து தமிழ் திரைப்பட ஹீரோ ஷாம் உள்பட 14 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

117 வயதில் வருமான வரி செலுத்தும் மூதாட்டி: நெகிழ்ந்துபோன வருவமானத்துறை அதிகாரிகள்!!!

வருமான வரித்துறையின் 160 ஆவது ஆண்டைக் கொண்டாடிய அதிகாரிகள் இந்தியாவில் அதிக வயதுடன் வருமான வரிசெலுத்தும் நபர்களை கௌரவித்து உள்ளனர்.