ரஜினி, கமல் அரசியல் குறித்து ஓவியாவின் பரபரப்பு பதில்

  • IndiaGlitz, [Saturday,November 23 2019]

தமிழ் சினிமாவில் சற்குணம் இயக்கிய ’களவாணி’ என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி, ஒரு சில வெற்றி படங்களை கொடுத்த நடிகை ஓவியா முன்னணி நடிகைகளின் பட்டியலை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்த நிலையில் திடீரென பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்

பிக்பாஸ் நிகழ்ச்சி என்றதும் அனைவருக்கும் ஓவியாதான் ஞாபகம் வரும் என்ற அளவுக்கு அந்த நிகழ்ச்சியில் அவர் மிகப்பெரிய புஅக்ழ் பெற்றார். கடந்த சில வருடங்களாக திரையுலகில் பெற்ற புகழை விட பல மடங்கு புகழை பிக்பாஸ் வீட்டில் இருந்த ஒரு சில நாட்களில் ஓவியா பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது

இருப்பினும் அந்த புகழை அவர் திரையுலகில் சரியாக பயன்படுத்தாததால் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் ஓவியாவுக்கு குறிப்பிடத்தக்க படங்கள் வெளியாகவில்லை என்பதும் வெளியான ஒரு சில படங்களும் பெரிய வெற்றியைப் பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் கோவையில் தனியார் நிறுவனம் ஒன்றின் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஓவியா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்த ஓவியா, கமல் ரஜினி இணைந்து அரசியல் செய்வது குறித்த கேள்வியை மட்டும் தவிர்த்துவிட்டார். கமலும் ரஜினியும் அரசியலில் இணைந்து செயல்படுவதை பற்றி பேச ஒன்றுமில்லை என்றும் அரசியல் பற்றி கருத்து சொல்ல விரும்பவில்லை என்றும் அவர் தெரிவித்தார்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் கமலஹாசனுக்கு ஓவியா நெருக்கமானவராக இருந்தாலும் ரஜினியின் தீவிர ரசிகை என்பதும் குறிப்பிடத்தக்கது