கருணாநிதி உடல்நிலை குறித்து நடிகை ஓவியா?

  • IndiaGlitz, [Thursday,August 02 2018]

சென்னை காவேரி மருத்துவமனையில் திமுக தலைவர் கருணாநிதி கடந்த ஆறு நாட்களாக தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருடைய உடல்நிலையில் தற்போது நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரிக்க கடந்த சில நாட்களாக திரையுலகினர் திரண்டு வருகின்றனர். குறிப்பாக ரஜினி, கமல், அஜித், விஜய் உள்பட அனைத்து நடிகர்களும் கருணாநிதியின் உடல்நிலை குறித்து நேரில் விசாரித்து தெரிந்து கொண்டனர்.

இந்த நிலையில் பிக்பாஸ் மூலம் பிரபலமாகிய நடிகை ஓவியா திமுக தலைவர் கருணாநிதி உடல்நிலை குறித்து கூறியப்போது 'திமுக தலைவர் கருணாநிதி உடல் நலம் பெற வேண்டுகிறேன்' என்று கூறியுள்ளார். மேலும் திமுக தலைவர் கருணாநிதியை சந்திக்கும் வாய்ப்பு உள்ளதா? என்ற செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு 'நான் அரசியல்வாதி இல்லை' என்று பதிலளித்தார்.

பெரும்பாலான நடிகர்கள் கருணாநிதியை சந்திக்க காவேரி மருத்துவமனைக்கு வந்தபோதிலும், பெரிய நடிகைகள் யாரும் இதுவரை மருத்துவமனைக்கு வந்து கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரிக்க நேரில் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

More News

நான் அந்த இடத்தில் இருந்திருந்தால்? ஐஸ்வர்யாவின் அட்டகாசம் குறித்து நித்யா

பிக்பாஸ் வீட்டில் கடந்த இரண்டு நாட்களாக சர்வாதிகாரி ராணி என்ற பெயரில் நடக்கும் அருவருக்கத்தக்க சம்பவங்களால் பிக்பாஸ் ரசிகர்கள் கொதித்து போய் உள்ளனர்

விஜய்யை அடுத்து கருணாநிதியை சந்திக்க வந்த அஜித்

திமுக தலைவர் கருணாநிதி சென்னை காவேரி மருத்துவமனையில் கடந்த ஐந்து நாட்களாக சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவரை தினந்தோறும் முக்கிய பிரமுகர்கள் சந்திக்க வந்து கொண்டிருக்கின்றனர்

கார்த்திக் நரேனின் 'நரகாசுரன்' ரிலீஸ் தேதி அறிவிப்பு

கார்த்திக் நரேன் இயக்கிய 'துருவங்கள் 16' படத்திற்கு பின்னர் அவர் இயக்கிய 'நரகாசுரன்' திரைப்படம் சமீபத்தில் சென்சார் சென்று 'யூஏ' சான்றிதழ் பெற்ற நிலையில்

சவால் வேண்டாம்: நடிகைகளுக்கு போலீஸ் எச்சரிக்கை

கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் உலக டிரெண்டில் இருப்பது Kiki challenge என்று கூறப்படும் ஒரு சேலஞ்ச். ஐஸ்பக்கெட் சேலஞ்ச் போல் வைரலாகி வரும்

காவேரி மருத்துவமனையில் விஜய்

திமுக தலைவர் கருணாநிதி கடந்த ஐந்து நாட்களாக சென்னை காவேரி மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.