சிம்பு, தனுஷுக்கு உள்ள வித்தியாசம் என்ன? ஓவியா
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் மூலம் உலகத்தமிழர்களின் மனதில் குடிகொண்ட ஓவியா, நேற்றிரவு சமூக வலைத்தளம் மூலம் ரசிகர்களிடம் வீடியோ சேட்டிங் செய்தார். இதில் ரசிகர்களின் பல கேள்விகளுக்கு சளைக்காமல் அவரது டிரேட் மார்க் சிரித்த முகத்துடன் தனது பதிலை கூறினார்
இந்த நிலையில் ரசிகர் ஒருவர் சிம்பு, தனுஷ் பற்றி ஓரிரு வார்த்தைகள் கூறுமாறு ஓவியாவிடம் கேட்க அதற்கு ஓவியா, 'சிம்பு நல்ல மனிதநேயம் மிக்கவர் என்றும் தனுஷ் இனிமையானவர் என்றும் கூறியுள்ளார். ஓவியா இதுவரை தனுஷ் மற்றும் சிம்புவுடன் இணைந்து நடித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது
மேலும் ரசிகர் ஒருவரின் வேண்டுகோளை ஏற்று பிக்பாஸ் நிகழ்ச்சியின்போது பாடிய 'கொக்கநட்ட' என்ற பாடலை பாடி காட்டினார். மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தான் வெற்றி பெற முடியவில்லை என்றாலும் மில்லியன் கணக்கான இதயங்களை வென்றுள்ளேன் அது போதும் என்றும் இன்னொரு கேள்விக்கு பதிலளித்துள்ளார்
தற்போது ராகவா லாரன்ஸ் இயக்கி நடிக்கும் 'காஞ்சனா 3' படத்தில் நடித்து வருவதாகவும், இதனையடுத்து நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாகவும், இந்த படம் குறித்த அறிவிப்பு மிக விரைவில் வெளிவரும் என்றும் மற்றொரு கேள்விக்கு பதிலளித்தார்
மேலும் தான் ஒரு பிரஷர் குக்கர் இல்லை என்றும் எப்போதுமே பிரஷரை மனதில் ஏற்றிக்கொள்ளாததால் தான் எப்போதும் சந்தோஷமாக இருந்து வருவதாக மேலும் ஒரு கேள்விக்கு பதிலளித்துள்ளார்.
இதுபோன்ற மேலும் பல சுவாரஸ்யமான கேள்விகளுக்கு பதிலளித்து நேற்றிரவு பலமணி நேரம் டுவிட்டரில் ஓவியா டிரெண்டில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
.@CECapture_ #AskOviyasweetz pic.twitter.com/U1VtCHXijf
— Oviyaa (@OviyaaSweetz) December 20, 2017
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com