ரைசாவின் ரகசியத்தை ஓவியா கூறியது சரியா?

  • IndiaGlitz, [Monday,July 31 2017]

நேற்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொருவரும் அவருக்கு கொடுக்கப்பட்டிருக்கும் இன்னொருவர் போல் நடித்து காட்ட வேண்டும் என்பதுதான் டாஸ்ல். இந்த வகையில் ஓவியா, ரைசா போல் நடித்து காட்ட வேண்டும்.
இந்த நிலையில் ரைசா போல், 'எனக்கு இங்கு இருக்கவே பிடிக்கவில்லை, எனக்கு என் பிரெண்ட்ஸை பார்க்கணும், செல்போன் வேண்டும் என்று கூறிய ஓவியா, திடீரென ரைசாவின் ஆண் நண்பர் குறித்தும் கூறிவிட்டார். அதுவரை ஓவியா கூறியதை ரசித்து கேட்டுக் கொண்டிருந்த ரைசா, திடீரென அப்செட் ஆனார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆரம்பகாலத்தில் தன்னுடைய ஆண் நண்பர் குறித்து ஓவியாவிடம் ரகசியமாக கூறியதை இப்படி பொதுமேடையில் உடைத்துவிட்டாரே என்பது ரைசாவின் கோபம். இதனால் உடனே அவர் ஓவியாவிடம் அதிருப்தி தெரிவித்ததோடு, பிக்பாஸ் இடம் தயவுசெய்து ஓவியா கூறியதை போட்டு காண்பிக்க வேண்டாம் என்று உருக்கமான வேண்டுகோளை வைத்தார்.
ஆனால் இந்த வேண்டுகோளையும் சேர்த்து போட்டிக்காட்டி தனது சுயரூபத்தை வெளிக்காட்டியுள்ளது அந்த சேனல். ரைசாவின் ரகசியத்தை ஓவியா கூறியது தவறு என்றால், அதை போட்டுக்காட்ட வேண்டாம் என்று கெஞ்சி கேட்டுக்கொண்டும் அதை போட்டுக்காட்டி நிகழ்ச்சியை பரபரப்பாக்கியது தவறு இல்லையா? என்ற கேள்வியும் எழுகிறது. ஓவியா செய்தது அநாகரீகம் என்றால், சேனல் செய்ததற்கு என்ன பெயர் என்பதை இந்த நிகழ்ச்சியை பார்த்து கொண்டிருக்கும் பார்வையாளர்கள் தான் கூற வேண்டும்