இவர்களால் தான் இந்த உலகத்திற்கே ஆபத்து: ஓவியா
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து எப்போது பேசினாலும் உடனே அனைவருக்கும் ஞாபகம் வரும் முதல் நபர் ஓவியா ஆகதான் இருக்கும். முதல் சீசனில் ஓவியா போட்டியாளராக கலந்து கொண்டாலும் அடுத்தடுத்த சீசன்களிலும் அவர் போட்டியாளர்களாலும் ரசிகர்களாலும் பேசப்பட்டுக் கொண்டே இருப்பதே அவர் எந்த அளவுக்கு மக்கள் மனதில் இடம்பிடித்துள்ளார் என்பது தெரிய வரும்
இந்த நிலையில் வெகு அரிதாகவே தனது சமூக வலைதளப் பக்கத்தில் டுவிட்டுகளை பதிவு செய்து வரும் ஓவியா சமீபத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடர்ந்து நடத்த வேண்டுமா? என்ற கேள்வியை எழுப்பி பரபரப்பை ஏற்படுத்தினார். போட்டியாளர்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தும் வகையில் நிகழ்ச்சியை நடத்த வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
இந்த நிலையில் தற்போது ஓவியா, தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த உலகம் மிகவும் ஒரு ஆபத்தான இடமாக மாறும் என்றால் அது தீயவர்களால் இருக்காது, ஒன்றுமே செய்யாமல் இருப்பவர்களால் தான் இந்த உலகம் ஆபத்தானதாக மாறும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்
வழக்கம்போல் இந்த டுவிட் புரிகிறதோ இல்லையோ ஓவியாவின் ஆர்மியினர் இந்த டுவிட்டையும் வைரலாக்கி வருகின்றனர்.
The world is a dangerous place not because of those who do evil,it’s because of those who look on and do nothing
— Oviyaa (@OviyaaSweetz) September 11, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com