"ஒல்லிக்குச்சி உடம்புக்காரி" ....ஓவியா-வின் ஓவியம் போல் மின்னும் புகைப்படங்கள்....!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் திரையுலகிற்கு களவாணி படம் மூலம் அறிமுகமானவர் தான் நடிகை ஓவியா. இதன் பின் மெரினா, மதயானைக் கூட்டம், களவாணி-2, புலிவால், சண்டமாருதம், கலகலப்பு, காஞ்சனா-3, மூடர்கூடம் மற்றும் 90ml உள்ளிட்ட ஒருசில படங்களில் நடித்திருந்தாலும், இந்த திரைப்படங்கள் பெரிதாக வெற்றிபெறவில்லை. ஓவியா மிகவும் பிரபலமானது 2017-இல் வெளிவந்த பிக் பாஸ் நிகழ்ச்சி மூலமாகத்தான். இவருடைய இயல்பான, எதார்த்தமான கேரக்டர் தான் அனைத்து ரசிகர்களுக்கும் பிடித்து போனது. ஓவியா ஆர்மி, ஓவியா பேன்ஸ் என லட்சக்கணக்கனாக ரசிகர்கள் இவரை ரசிக்க ஆரம்பித்துவிட்டார்கள். பிக் பாஸ் நிகழ்ச்சியின் துவக்கத்தில் இருந்து முடிவு வரை எங்கு பார்த்தாலும் ஓவியா, ஓவியா என்று அவருடைய பெயரே சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது.
இந்நிலையில் ஓவியா இன்ஸ்டா-வில் பதிவிட்ட புகைப்படம் வைரலாகி வருகிறது, அதில் ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு ஒல்லியாகி விட்டார் ஓவியா. அவ்வப்போது ஒருசில விளம்பரங்களில் நடித்து வரும் ஓவியா, தற்போது சம்பவம் என்ற படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aarna Janani
Contact at support@indiaglitz.com
Comments