மது அருந்துவது உடல்நலத்திற்கு தீங்கானது.. குடித்து கொண்டே அறிவுரை கூறிய ஓவியா..!
- IndiaGlitz, [Sunday,July 28 2024]
பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலம் அடைந்த நடிகை ஓவியா குடித்துக் கொண்டிருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்து குடிப்பழக்கம் உடல் நலத்திற்கு தீங்கானது என கேப்ஷனாகவும் பதிவு செய்துள்ளதை அடுத்து இந்த பதிவுக்கு ஏராளமான லைக்ஸ் குவிந்து வருகிறது.
தமிழ் திரையுலகின் நடிகைகளில் ஒருவரான ஓவியா, ’களவாணி’ ’மன்மதன் அம்பு’ ’முத்து குளிக்க வாரீகளா’ ’மூடர்கூடம்’ ’சில்லுனு ஒரு சந்திப்பு’ ’மதயானை கூட்டம்’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது அவர் ’சம்பவம்’ ’ராஜ பீமா’ ஆகிய இரண்டு படங்களில் நடித்து வரும் நிலையில் இன்ஸ்டாகிராமிலும் பிரபலமாக உள்ளார் என்பதும் அவ்வப்போது சில புகைப்படங்களை அவர் பதிவு செய்து வருவார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சற்றுமுன் அவர் சரக்கு அடித்துக் கொண்டே அசைவ உணவு சாப்பிடும் புகைப்படத்தை பதிவு செய்து ’குடிப்பழக்கம் உடல் நலத்திற்கு தீங்கானது’ என்றும் தெரிவித்துள்ளார்.
ஓவியாவின் இந்த பதிவுக்கு ’நன்றாக வாழ்க்கையை அனுபவியுங்கள், நீங்கள் தான் உண்மையாக இருக்கிறீர்கள்’ என்றும் ’நீங்கள் பதிவு செய்யும் ஒவ்வொன்றும் அபாரமாக உள்ளது’ என்றும் ’பொறுப்புள்ள குடிமகள்’ என்றும் ’இயற்கையாகவே நீங்கள் அழகாக இருக்கின்றீர்கள்’ என்றும்’ எந்தவித கட்டுப்பாடும் இல்லாமல் வாழ்க்கையை அனுபவியுங்கள்’ என்றும் பல்வேறு கமெண்ட்ஸ் பதிவாகி வருகிறது.