ஓவியாவின் அதிகாலை அழைப்பு: ரசிகர்கள் குஷி
Send us your feedback to audioarticles@vaarta.com
ஓவியா நடித்த '90ml' திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளிவந்து கலவையான விமர்சனத்தை பெற்றது. இரட்டை அர்த்த வசனங்களுடன் கூடிய இந்த டிரைலருக்கு ஒருசிலர் கடும் எதிர்ப்புகளை பதிவு செய்தனர்.
இந்த நிலையில் நடிகை ஓவியா இந்த படத்தின் ரிலீஸ் தேதி பிப்ரவரி 22 என தனது சமூக வலைத்தள பக்கத்தில் அறிவித்துள்ளார். அதுமட்டுமின்றி முதல்முறையாக ஓவியா நடித்த திரைப்படம் மாஸ் நடிகர்களின் படங்களுக்கு நிகராக அதிகாலை ஐந்து மணி காட்சியும் திரையிடப்படுகிறது. இந்த தகவலை உறுதி செய்த ஓவியா, அதிகாலை ஐந்து மணி காட்சியின்போது ரசிகர்களை சந்திக்கவிருப்பதாகவும் அறிவித்துள்ளார். ஓவியாவின் இந்த அழைப்பு அவரது ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.
ஓவியா முக்கிய வேடத்தில் நடித்துள்ள இந்த படத்தை அனிதா உதூப் இயக்கியுள்ளார். சிம்பு இசையில். அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவில் அந்தோணி படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை நிவிஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.
Hey guys !!!
— Oviyaa (@OviyaaSweetz) February 12, 2019
Meet you all at an early morning show of #90ML releasing worldwide on Feb 22nd ????????????#90MLFromFeb22
Thank u @anitaudeep @NvizFilms @90ml_film pic.twitter.com/ZxBwgXPT9a
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments