இந்தியாவின் மிகவும் விரும்பத்தக்க பெண்கள் பட்டியலில் பிக்பாஸ் நடிகை

  • IndiaGlitz, [Friday,May 11 2018]

உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் புகழின் உச்சத்துக்கு சென்றவர் நடிகை ஓவியா என்பது தெரிந்ததே. இந்த நிகழ்ச்சியின் வெற்றியாளரான ஆரவ்வை விட ஓவியாவுக்கு அதிக ரசிகர்கள் இருந்தனர் என்பதும், அந்த அன்பின் மிகுதியால் சமூக வலைத்தளங்களில் ஓவியா பல நாட்கள் டிரெண்டில் இருந்தார் என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் பிரபல ஆங்கில பத்திரிகை ஒன்று 2017ஆம் ஆண்டின் மிகவும் விரும்பத்தக்க பெண்களின் பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் பிக்பாஸ் புகழ் நடிகை ஓவியாவுக்கு 28வது இடம் கிடைத்துள்ளது.

இந்த பட்டியலில் உலக அழகி பட்டம் வென்ற மனுஷி ஷெல்லார் முதலிடத்தையும், நடிகை தீபிகா படுகோனே இரண்டாவது இடத்தையும், பிரபல நடிகை ஜாக்குலின் பெர்ண்டஸ் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளனர்.

மேலும் எமிஜாக்சன் 6வது இடத்திலும் சன்னிலியோன் 8வது இடத்திலும், பூஜா ஹெக்டே 22வது இடத்திலும், சோனம் கபூர் 24வது இடத்திலும், கங்கனா ரனாவத் 34வது இடத்திலும், ராதிகா ஆப்தே 43வது இடத்திலும், ஷ்ரேயா சரண் 48வது இடத்திலும் பார்வதி 50வது இடத்திலும் உள்ளனர்.

More News

விஜய்யை அடுத்து சூர்யாவுடன் இணையும் சூப்பர் ஸ்டார்

சூர்யா தற்போது செல்வராகவன் இயக்கத்தில் உருவாகி வரும் 'NGK' என்ற படத்தில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தை அடுத்து அவர் இயக்குனர் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் என்பதும் தெரிந்ததே

பாஸ்கர் ஒரு ராஸ்கல் ரிலீஸ் தேதி திடீர் மாற்றம்

இன்று விஷாலின் இரும்புத்திரை, அரவிந்தசாமியின் பாஸ்கர் ஒரு ராஸ்கல், அருள்நிதியின் இரவுக்கு ஆயிரம் கண்கள் மற்றும் கீர்த்திசுரேஷின் நடிகையர் திலகம்

விசுவாசம்' படத்தில் இணைந்த மேலும் ஒரு காமெடி நடிகர்

தல அஜித், நயன்தாரா நடித்து வரும் 'விசுவாசம்' திரைப்படத்தில் ஏற்கனவே ரோபோசங்கர் யோகிபாபு, தம்பி ராமையா, இமான் அண்ணாச்சி ஆகிய காமெடி நடிகர்கள் நடித்து வருகின்றனர் என்ற செய்தி வெளிவந்ததை பார்த்தோம்.

எஸ்.வி.சேகரின் முன்ஜாமின் மனு: சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு

பெண் பத்திரிகையாளர்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தனது முகநூலில் பதிவு செய்த எஸ்.வி.சேகருக்கு பத்திரிகையாளர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

கோலி சோடா 2 ரிலீஸ் தேதி திடீர் மாற்றம்

பிரபல இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளர் இயக்கிய 'கோலி சோடா 2' திரைப்படம் மே மாதம் 18ஆம் தேதி வெளியாகும் என்று சமீபத்தில் அறிவிக்கப்பட்டு அதற்கான புரமோஷன் பணிகளும் நடந்து வருகிறது.