டுவிட்டரில் ஓவியாவின் முக்கிய அறிவிப்பு: ரசிகர்கள் உற்சாகம்

  • IndiaGlitz, [Monday,December 18 2017]

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் அனைவருமே தற்போது தொலைக்காட்சி மற்றும் சினிமாவில் பிசியாக இருக்கும் நிலையில் இந்த நிகழ்ச்சியின் மூலம் கோடிக்கணக்கான ரசிகர்களின் மனதில் இடம்பெற்றவர் ஓவியா. இவர் பிக்பாஸ் டைட்டிலை வெற்றி பெறவில்லை என்றாலும் இவர்தான் மக்களின் வின்னராக இன்றளவும் உள்ளார்

இந்த நிலையில் நடிகை ஓவியா, ராகவா லாரன்ஸ் இயக்கி நடிக்கும் 'காஞ்சனா 3' படம் உள்பட ஒருசில படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று ஓவியா தனது டுவிட்டரில் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்

அதாவது டிசம்பர் 20ஆம் தேதி இரவு 8 மணிக்கு டுவிட்டர் இணையதளம் மூலம் ரசிகர்களிடம் உரையாடவுள்ளதாகவும், அன்றைய தினம் ரசிகர்கள் தன்னிடம் கேள்விகளை கேட்கலாம் என்றும் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. இந்த ஒரே ஒரு அறிவிப்பு 15ஆயிரத்திற்கும் மேற்பட்ட லைக்ஸ்களை ஒருசில மணி நேரத்தில் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.