ஓவியாவை கட்டிப்பிடித்து கண்ணீர் விட்ட காயத்ரி! ஜூலியின் நிலை என்ன?
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பாளர்களிடையே ஏற்படும் பிரச்சனைகளுக்கு பெரும்பாலும் ஜூலி அல்லது காயத்ரி தான் காரணமாக இருக்கின்றார்கள் என்பது இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து பார்த்து வருபவர்களுக்கு தெரியும். குறிப்பாக ஓவியாவை கண்டபடி திட்டிக்கொண்டே இருக்கும் காயத்ரி மீது நிகழ்ச்சியை பார்க்கும் அனைவருக்கும் வெறுப்புதான் ஏற்படுகிறது.
இந்த நிலையில் நேற்று ஓவியா, காயத்ரி இருவரையும் பிக்பாஸ் கன்பெஃக்ஷன் அறைக்கு அழைத்தார். இருவரும் ஒருவரை ஒருவர் மனம் விட்டு பேசிக்கொள்ளுங்கள் என்றும், தங்களிடம் இருக்கும் கருத்துவேறுபாடுகளை மறந்துவிடுங்கள் என்றும் அறிவுரை கூறினார். இதன்பின்னர் இருவரும் மனம்விட்டு பேசி ஒருவர் இன்னொருவருக்கு வருத்தம் தெரிவித்து கொண்டனர்.
ஒருகட்டத்தில் இருவரும் உணர்ச்சிவசப்பட்டு ஆனந்தக்கண்ணீருடன் கட்டியணைத்து கொண்டனர். இதனால் இருவரும் கிட்டத்தட்ட ஒன்று சேர்துவிட்டதாகவே தெரிகிறது. இந்த நிலையில் காயத்ரியை நம்பி, ஓவியாவை வெறுத்து வரும் ஜூலிக்கு தான் தற்போது இக்கட்டான நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே 'நீ விரைவில் தனிமைப்படுத்தப்படுவாய்' என ஓவியா ஜூலியை எச்சரித்த நிலையில் தற்போது உண்மையிலேயே தனிமைப்படுத்தப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் இனிமேல் நிகழ்ச்சி சுவாரஸ்யமாக செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com